பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வருகிற 23-ந்தேதி பேச்சுப்போட்டி
- மதுரை பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வருகிற 23-ந்தேதி பேச்சுப்போட்டி நடக்கிறது.
- மேற்கண்ட தகவலை தமிழ் வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது.
மதுரை
தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு பேச்சுப் போட்டிகள் நடைபெற உள்ளது.
தமிழ் வளர்ச்சித் துறை யின் 2021-2022 ஆம் ஆண்டிற்கான மானியக்கோ ரிக்கை அறிவிப்பில், நாட்டிற்காகப்பாடுபட்ட தலை வர்களான மகாத்மா காந்தி, ஜவகர்லால்நேரு, அண்ணல் அம்பேத்கர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கருணாநிதி ஆகியோரின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்குப் பேச்சுப் போட்டிகள் நடத்தி பரிசு, பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பிற்கிணங்க, கருணாநிதி பிறந்த நாள் பேச்சுப்போட்டிகள் வருகிற 23.08.2023 அன்று பள்ளி மாணவர்களுக்கு முற்பகலிலும், கல்லூரி மாணவர்களுக்குப் பிற்பக லிலும் மதுரை உலகத்தமிழ்ச்சங்க வளாகக் கூட்டரங்கில் நடத்தப்பட இருக்கி றது.
அரசு, தனியார், அரசு உதவிபெறும் பள்ளிகளின் மாணவர்கள், அரசு, தனி யார், அரசு உதவி பெறும் கலைக் கல்லூரி கள், பொறியியல் மருத்துவக் கல்லூரிகள், பல்தொழில் நுட்பக் கல்லூரிகளின் மாணவர்கள் இப்பேச்சுப் போட்டிகளில் பங்கேற்க லாம்.
போட்டிகள் குறித்த விவரங்கள், பள்ளிகளுக்கு முதன்மைக் கல்வி அலுவலர் வாயிலாகவும், கல்லூரிகளுக்குக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் வாயிலாகவும் அனுப்பப்படும்.
கருணாநிதி பிறந்தநாள் பேச்சுப்போட்டிக்காக தலைப்புகள் வெளியிடப்பட் டுள்ளது. அதன்படி பள்ளி மாணவர்களுக்கு கலைத்தாயின் தவப்புதல் வன், முத்தமிழறிஞர், சங்கத் தமிழ், செம்மொழி, பிறப் பொக்கும் எல்லா உயி ருக்கும், பொறுத்தது போதும் பொங்கி எழு, நல்லான் வகுத்ததா நீதி இந்த வல்லான் வகுத்ததே நீதி, தகடூரான் தந்த கனி, திராவிடம், நெஞ்சுக்கு நீதி.
கல்லூரி மாணவர்களுக்கு என் உயிரினும் மேலான அன்பு உடன் பிறப்புகளே, அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதங்கள், சமத்துவபுரம், திராவிடச்சூரியனே, பூம்பு கார், நட்பு, குறளோவியம், கலைஞரின் எழுதுகோல், அரசியல் வித்தகர் கலைஞர், சமூகநீதிக் காவலர் கலைஞர் ஆகிய தலைப்புகளில் முத்தமிழறிஞர் கருணாநிதி யின் பிறந்தநாள் பேச்சுப் போட்டிகள் நடைபெற வுள்ளன.
பள்ளி கல்லூரி மாண வர்களுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசு ரூ.5000, இரண்டாம்பரிசு ரூ.3000, மூன்றாம் பரிசு ரூ.2000 என்ற வீதத்திலும் பள்ளி மாணவர்களுக்கென நடத் தப்படும் பேச்சுப் போட்டி யில் மட்டும், தங்கள் பேச் சுத்திறனைச் சிறப்பாக வெளிப்படுத்திய அரசுப் பள்ளி மாணவர்கள் இரண்டு பேர் தனியாகத்தேர்வு செய்யப்பட்டு ஒவ்வொருவருக்கும் சிறப்புப்பரிசு ரூ.2000 என்ற வீதத்திலும் வழங்கப்பட உள்ளன.
மேற்கண்ட தகவலை தமிழ் வளர்ச்சித்துறை தெரிவித்துள்ளது.