24 கிலோ கஞ்சா பறிமுதல்; 4 வாலிபர்கள் கைது
- கீழ்மதுரை ரெயில் நிலையம் அருகே 24 கிலோ கஞ்சா பறிமுதல்; 4 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
- இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை மாநகரில் புகையிலை பொருட்கள், கஞ்சா விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். இருப்பினும் இளைஞர்களை குறிவைத்து சமூக விரோதிகள் கஞ்சா விற்பது அதிகரித்துள்ளது. மதுரையில் உள்ள கீழ்மதுரை ரெயில் நிலையம் சந்திப்பு பகுதியில் கஞ்சா விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் தெப்பக்குளம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் அந்த பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது கீழ்மதுரை ரெயில்நிலையம் அருகே மறைவான இடத்தில் பதுங்கியிருந்த 4 பேரை பிடித்து ேபாலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார் அவர்களை சோதனை செய்தபோது 24 கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. அதிர்ச்சிடைந்த போலீசார் 4 பேரையும் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அவர்கள் திடீர்நகர் அலாவுதீன் தோப்பு சலீம் மகன் சசீர் (வயது23), வாடிப்பட்டி வினோபா நகர் சொக்கலிங்கபுரம் காந்தி மகன் திலீப் குமார் (22), சிவகங்கை மாவட்டம் மானாமதுரை வெள்ளாளர் தெரு செல்வம் மகன் குருமூர்த்தி(20), உசிலம்பட்டி வடக்கு தெரு நரியம்பட்டி சந்திரன் மகன் சரத்குமார் (22) என்று தெரியவந்தது.
இவர்களுக்கு கஞ்சா சப்ளை செய்தவர்கள் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.