உள்ளூர் செய்திகள்

சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதற்கான சான்றிதழ் அமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் வழங்கப்பட்டது. 

கருணாநிதி உருவில் அணிவகுத்த 2,752 தூய்மை பணியாளர்கள்

Published On 2023-06-10 08:32 GMT   |   Update On 2023-06-10 08:32 GMT
  • மதுரை ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் 2,752 தூய்மை பணியாளர்கள் கருணாநிதி உருவத்தை அணிவகுப்பின் மூலம் காட்டினர்.
  • சாதனை புத்தகத்தில் இடம் பிடித்தது

மதுரை

மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 100 வார்டுகளிலும் சுமார் 2500-க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் மதுரையில் உள்ள தூய்மை பணியாளர்கள் அனைவரும் ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் இன்று காலை திரண்டனர்.

சாதனை முயற்சியாக 2752 தூய்மை பணியாளர்களும் கருணாநிதியின் தத்ரூப உருவத்தை தங்களது அணிவகுப்பின் மூலம் காட்டினார்கள். இதனை டிரோன் மூலம் படம் எடுக்கப்பட்டது. அப்போது கருணாநிதியின் சாதனை திட்டங்களை வாழ்த்தியும் கோஷங்கள் எழுப்பினர்.

100 மீட்டர் நீளமும், 70 மீட்டர் அகலத்திலும் கருணாநிதி உருவ வடி வத்தில் தூய்மை பணி யாளர்கள் நின்றிருந்தனர். காலை 7.23 மணிக்கு தொடங்கிய இந்த சாதனை நிகழ்ச்சி 8.43 மணிக்கு முடிவடைந்தது. தூய்மை பணியாளர்களின் கருணாநிதி உருவம் பார்வை யாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த சாதனை உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற பரிந்துரை செய்யப்பட்டி ருந்தது.

தூய்மை பணியாளர்க ளின் கருணாநிதி உருவ அணிவகுப்பை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், கயலெக்டர் சங்கீதா, தளபதி எம்.எல்.ஏ., மேயர் இந்தி ராணி, மாநகராட்சி கமிஷ னர் பிரவீன்குமார், பூமி நாதன் எம்.எல்.ஏ. மற்றும் மண்டல தலைவர்கள் கவுன்சிலர்கள், பொது மக்கள் பார்வையிட்டனர்.

இந்த நிலையில் தூய்மை பணியாளர்களின் இந்த சாதனையை அங்கீகரிக்கும் வகையில் உலக சாதனை புத்தகமான டிரம்ப்பில் இடம் பெற்றது. இதற்கான சான்றிதழ்களை அமைச்சர் பழனிவேல் தியாகராஜ னிடம், சாதனை புத்தக நிர்வாகிகள் வழங்கினர்.

Tags:    

Similar News