கோழி வியாபாரியை தாக்கிய 5 பேர் கைது
- மதுரையில் கோழி வியாபாரியை தாக்கிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
- பழனிச்சாமி மதிச்சியம் போலீசில் புகார் கொடுத்தார்.
மதுரை
மதிச்சியம், காந்தி நகரைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (வயது 44), கோழி கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை இவர் வைகை வடகரை, ஆசாரி தோப்பு பகுதியில் நடந்து சென்றார்.
அங்கு குடிபோதையில் இருந்த 5 பேர் தகராறில் ஈடுபட்டனர். எனவே பழனிச்சாமி, "ஏன் இப்படி செய்கிறீர்கள்?" என்று தட்டிக்கேட்டார். ஆத்திரம் அடைந்த 5 பேரும் கோழி வியாபாரியை தாக்கினர்.
இதுகுறித்து பழனிச்சாமி மதிச்சியம் போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து கோழி வியாபாரியை தாக்கிய ஆசாரி தோப்பு ரவிச்சந்திரன் மகன் கபடி சூர்யா (24), முருகன், மானகிரி செல்லத்தம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த பால்பாண்டி மகன் மாரிமுத்து என்ற ஆட்டு மாரி (24), உஸ்மான் காலனி ஆறுமுகம் மகன வெங்கடராஜேஷ் (23), அபீஸ்குமார் ஆகியோரை கைது செய்தனர்.
ஆழ்வார் புரத்தைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி (26). கூலித்தொழிலாளி. இவரும் கீரைத்துறை, ராணி பொன்னம்மாள் ரோட்டை சேர்ந்த ராமர் (56) என்பவரும் ஒரே நிறுவ னத்தில் வேலை பார்த்து வந்தனர்.
சம்பவத்தன்று நள்ளிரவு இருவரும் குடிபோதையில் தெற்கு மாரட் வீதி பாண்டிய வேளாளர் தெரு சந்திப்பில் நடந்து வந்தனர். அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த ராமர், ஆசைத்தம்பியை கத்தியால் குத்தி விட்டு தப்பினார்.
இது குறித்த புகாரின் பேரில் தெற்குவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராமரை கைது செய்தனர்.