உள்ளூர் செய்திகள்

வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 5 பேர் கைது

Published On 2023-05-09 09:00 GMT   |   Update On 2023-05-09 09:00 GMT
  • வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
  • அழகர் இருப்பிடம் செல்லும் நிகழ்ச்சியுடன் முடிவடைந்தது.

மதுரை

மதுரையில் பிரசித்தி பெற்ற சித்திரை திருவிழா கடந்த 23-ந்தேதி தொடங்கி நேற்று அழகர் இருப்பிடம் செல்லும் நிகழ்ச்சியுடன் முடிவடைந்தது. இந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் சமூக விரோதிகள் வழிப்பறி, நகை பறிப்பு, பணம் பறித்தல், பொது சொத்துக்களை சேதப்படுத்துதல் போன்ற செயல்களில் தைரியமாக ஈடுபட்டனர். இதனால் பொதுமக்கள் பயமின்றி சித்திரை திருவிழாவுக்கு செல்ல முடியவில்லை.

இந்தநிலையில் திருவிழா வின்போது வழிப்பறியில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். மதுரை முடக்கத்தான் தேவேந்திரன் நகரை சேர்ந்தவர் சின்னான் (வயது53). இவர் சம்பவத் தன்று கள்ளழகரை தரிசிப்பதற்காக வெளியே சென்றார். ராஜாஜி பூங்கா அருகே நடந்து சென்றபோது அங்கு வந்த 4 பேர் கொண்ட கும்பல் கத்தியை காட்டி மிரட்டி ரூ. 1000 பறித்துச் சென்றது.

இது தொடர்பாக தல்லா குளம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில், பணம் பறிப்பில் ஈடுபட்டது பி.பி.குளம், முல்லை நகர், செல்வம் மகன் சுபாஷ் (வயது 21), ஆத்திகுளம், அங்கயற்கண்ணி காலனி, ராமராஜ் மகன் சுந்தரேஸ் வரன் ( 22), மீனாம்பாள்புரம், பாரதிதாசன் தெரு, முருகன் மகன் சந்தோஷ் (19) மற்றும் முல்லை நகர், எல்.ஐ.சி காலனியை சேர்ந்த 16 வயது சிறுவன் என தெரியவந்தது. இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் சித்திரை திருவிழாவுக்கு வந்த திருப்பரங்குன்றத்தை சேர்ந்த செந்தில்குமார் என்பவரிடம் கத்தி முனையில் செல்போன் பறித்ததாக சோலையழகு புரத்தை சேர்ந்த மணிகண்டன் என்பவரை விளக்குத்தூண் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News