ரெயில் டிக்கெட் முறைகேடாக விற்ற ஈடுபட்ட 90 பேர் கைது
- மதுரையில் ரெயில் டிக்கெட் முறைகேடாக விற்ற ஈடுபட்ட 90 பேர் கைது செய்யப்பட்டனர்.
- அவர்களிடம் இருந்து ரூ.8 கோடி சொத்துக்கள் மீட்கப்பட்டன.
மதுரை
மதுரை கோட்டத்தில் ரெயில் டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 90 பேரை ரெயில்வே போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.15.44 லட்சம் மதிப்பு உள்ள பயண சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
அதேபோல அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை ரெயிலில் கொண்டு சென்ற 10 பேர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் ரூ.2.56 லட்சம் மதிப்புள்ள புகையிலை பறிமுதல் செய்யப்பட்டது. போலி மது பாட்டில்கள் கடத்திய 6 பேர் சிக்கினர்.
அவர்களிடம் இருந்து ரூ.24,477 மதிப்புள்ள மது பாட்டில்கள் பிடிபட்டன. ரெயிலில் 122.85 கிலோ கஞ்சா கடத்தியதாக 8 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் ரூ.9.79 லட்சம் மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
வீட்டில் கோபித்துக் கொண்டு ரெயில் நிலையத்தில் சுற்றிய 195 சிறுவர்கள், 35 சிறுமிகள் மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். அடுத்தபடியாக ரெயில்வே சொத்துகளை அபகரித்த 59 பேர் கைது செய்யப்பட்டு, லட்சம் மதிப்புள்ள உடமைகள் மீட்கப்பட்டு உரி யவர்களிடம் ஒப்ப டைக்கப்பட்டு உள்ளது.
ரெயில்களில் சென்ற 120 பயணிகளுக்கு அவசர மருத்துவ உதவி செய்யப்பட்டு உள்ளது.
அகில இந்திய அளவில் ரெயில் டிக்கெட்டுகளை முறைகேடாக விற்ற 5,179 பேர் சிக்கி உள்ளனர். அவர்களிடம் 140 சட்டவிரோத மென்பொருட்கள் அழிக்கப்பட்டு உள்ளன. ரெயில்களில் ரூ.80 கோடி மதிப்புள்ள போதை பொருட்களை கடத்திய 1081 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்திய அளவில் 143 ரெயில் நிலையங்களில் 17,756 சிறுவர்-சிறுமிகள் மீட்கப்பட்டு பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளனர். ரெயில்வே சொத்துக்களை அபகரித்த 11,268 பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் ரூ.7.37 கோடி மதிப்புள்ள ரெயில்வே சொத்துக்கள் மீட்கப்பட்டு உள்ளன.
194 கடத்தல்காரர்கள் கைது செய்யப்பட்டு, அவர்கள் பிடித்து வைத்திருந்த 559 நபர்கள் மீட்கப்பட்டு உள்ளனர். ஓடும் ரெயிலில் ஏறி நடைமேடையில் விழுந்த 852 பேர் பத்திரமாக காப்பாற்றப்பட்டு உள்ளனர். ரெயிலில் தவறவிடப்பட்ட ரூ.46.5 கோடி மதிப்புள்ள 25,500 உடைமைகள் மீட்கப்பட்டு, உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
பெண்கள் பாதுகாப்பி ற்காக 640 ரெயில்களில் 243 பாதுகாப்பு படை வீராங்கனைகள் அடங்கிய "என் தோழி" குழுக்கள் உருவாக்கப்பட்டு, அவர்கள் வெற்றிகரமாக செயல்பட்டு வருகின்றனர். ஓடும் ரெயில்களில் 209 குழந்தைகள் பிறந்து உள்ளன.
இந்த தகவலை தெற்கு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.