மூதாட்டியின் கழுத்தில் இருந்த 2 கிலோ எடையுள்ள தைராய்டு கட்டி
- மூதாட்டியின் கழுத்தில் இருந்த 2 கிலோ எடையுள்ள தைராய்டு கட்டி அகற்றப்பட்டது.
- இது போன்ற பிரச்சினைகள் புற்றுநோயாக கூட மாறிவிடும்.
மதுரை
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த பெண்ணின் வயிற்றில் இருந்த 2 கிலோ எடையுள்ள தைராய்டு கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இதுகுறித்து மதுரை நரிமேடு சரவணா மருத்துவமனை டாக்டர் சரவணன் கூறியதாவது:-
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த 63 வயது பெண் எங்களது மருத்துவ மனைக்கு வெளி நோயா ளியாக வந்தார். அவரை பரிசோதித்ததில் கழுத்துப் பகுதியில் பெரிய அளவி லான தைராய்டு கட்டி இருப்பது கண்டறி யப்பட்டது.
சுமார் 30 வருடங்களுக்கு மேலாக அந்த கட்டி இருந்துள்ளது. உடனடியாக சரவணா மருத்துவ மனை அறுவை சிகிச்சை குழுவி னரின் உதவியுடன் அந்த கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது. இந்த கட்டி சுமார் 2 கிலோ எடையுள்ளதாக இருந்தது.
கிராமப்புற மக்கள் அறியாமையால் ஆரம்ப கட்டத்திலேயே இது போன்ற கட்டிகளை கண்டு கொள்ளாமல் விட்டு விடுகின்றனர். இது போன்ற கட்டிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள மருத்துவரை அணுக வேண்டும். இதற்காக ஆரம்பத்திலேயே சிகிச்சை எடுத்துக்கொண்டு ஆரோக்கியமாக வாழ வேண்டும். இல்லையெனில் இது போன்ற பிரச்சினைகள் புற்றுநோயாக கூட மாறிவிடும்.
இவ்வாறு அவர் கூறினார்.