கற்களுக்கு இடையே சிக்கிக்கொண்ட பசு மாடு
- கற்களுக்கு இடையே பசு மாடு சிக்கிக்கொண்டது.
- 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.
மதுரை
மதுரை மீனாட்சி பஜார் ஸ்காட் ரோடு பகுதியில் ெரயில்வே தண்டவாளம் அருகே பராமரிப்பு பணிக ளுக்காக 650 கிலோ எடை கொண்ட 25-க்கும் மேற்பட்ட கற்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இன்று காலை அங்கு மேய்ச்சலுக்காக சென்ற ஒரு பசுமாடு அங்கு இருந்த கற்களுக்குள் சிக்கி கொண்டது. உடல் பகுதி முழுவதும் சிக்கிக்கொண்டு வெளியேற முடியாமல் தவித்தது. அங்கிருந்தவர்கள் இதை பார்த்து தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலறிந்து சம்பவ வந்த தீயணைப்புத் துறை யினர் கற்களுக்குள் சிக்கியபடி தவித்து கொண்டிருந்த பசு மாட்டை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
உயிருடன் பசு மாட்டை மீட்க வேண்டும் என்பதால் அவர்கள் பொறுமையாக செயல்பட வேண்டியிருந்தது. இதனால் மீட்பு பணியில் காலதாமதம் ஏற்பட்டது.
பின்னர் தீயணைப்பு துறையினருடன், பொது மக்களும் இணைந்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த கற்களை அகற்றினர். 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பசுமாடு உயிருடன் மீட்கப்பட்டது.
பசுமாட்டை உயிருடன் மீட்ட எஸ்.எஸ்.ஓ. பால முருகன் மற்றும் தீயணைப்பு வீரர்கள் சுப்புராஜ், கார்த்திக், ராமர், பால் பாண்டி, வில்வகுமார் ஆகி யோரை அங்கிருந்தவர்கள் பாராட்டினர்.