மின்சாரம் தாக்கி தீக்காயம் அடைந்த வாலிபருக்கு தொடர்ந்து சிகிச்சை
- மின்சாரம் தாக்கி தீக்காயம் அடைந்த வாலிபருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- அப்போது அவர் உற்சாக மிகுதியால் ரெயில் என்ஜின் மீது ஏறி கொடியுடன் நின்ற போது மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார்.
மதுரை
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் இமானுவேல் சேகரன் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதில் கலந்து கொள்வதற்காக 20 பேர் தேவகோட்டைக்கு வந்தனர். அவர்கள் ரெயில் என்ஜின் மீது ஏறி கொடியுடன் கோஷம் போட்டனர். இதில் பனிப்புலான்வயல் பகுதியைச் சேர்ந்த முகேஷ் (18) என்பவர் மீது உயர் அழுத்த மின்சாரம் தாக்கியது.
தீ காயங்களுடன் அவர் பரமக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அனுப்பானடியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். முகேசுக்கு 50 சதவீத தீக்காயங்கள் உள்ளன. உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடும் வாலிபருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகிறார்கள். முகேஷ் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் பிளஸ்- டூ படித்து வருகிறார். நேற்று விடுமுறை என்பதால் அவர் பள்ளிக்கு செல்லவில்லை. நண்பர்களுடன் திருச்சி- ராமேசுவரம் ரெயில் மூலம் பரமக்குடி வந்து உள்ளார்.
அப்போது அவர் உற்சாக மிகுதியால் ரெயில் என்ஜின் மீது ஏறி கொடியுடன் நின்ற போது மின்சாரம் தாக்கி படுகாயமடைந்தார்.