புதிய உயர்மட்ட ெரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை
- வடபழஞ்சி பகுதியில் புதிய உயர்மட்ட ெரயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
- பொதுமக்களிடம் அதிகாரி உறுதியளித்துள்ளார்.
மதுரை
மதுரை-போடி அகல ரெயில் பாதை அமைக்கும் பணிகள் நடந்தபோது வடபழஞ்சி-நாகமலை புதூர் பகுதியில் பொது மக்கள் பயன்பாட்டிற்கு ரெயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.ஆனால் மழை காலங்களில் சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கி பொதுமக்கள் மற்றும் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
மேலும் தண்ணீர் தேங்கியதால் சுகாதார சீர்கேடும் ஏற்பட்டது.இதனை சரி செய்யக்கோரி அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். ரெயில்வே சுரங்கப் பாதையை மூடிவிட்டு உயர்மட்ட பாலம் அமைத்து தர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
மாவட்ட கலெக்டர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், ரெயில்வே துறையிடமும் கோரிக்கை மனுக்களை அளித்தனர். இந்த நிலையில் மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் வடபழஞ்சிக்கு சென்று ஆய்வு செய்தார். பின்னர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.
பின்னர் மதுரை காமராசர் பல்கலைக்கழக பகுதியில் கட்டப்பட்ட உயர்மட்ட பாலத்தின் அருகே ரெயில்வே துறை ஒப்புதல் பெற்று புதிய உயர்மட்ட பாலம் கட்டித்தர நடவடிக்கை எடுக்ககப்படும் என பொதுமக்களிடம் வருவாய் அலுவலர் உறுதி யளித்தார்.
ஆய்வின்போது வருவாய் கோட்டாட்சியர் சர்மிளா, மதுரை மேற்கு தாசில்தார் நாகராஜன், மண்டல துணை வட்டாட்சியர் வீரக்குமார், சர்வேயர் பழனி, வருவாய் ஆய்வாளர் செல்வி, கிராம நிர்வாக அலுவலர் பாண்டி மற்றும் ரெயில்வே கோட்ட பொறியாளர் வில்சன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.