உள்ளூர் செய்திகள்

சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பாவிடம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அருகில் நிர்வாகிகள் வக்கீல் ரமேஷ், நிலையூர் முருகன் உள்ளனர்.

நிலையூர் கால்வாயை பாசன கால்வாயாக மாற்ற நடவடிக்கை

Published On 2022-10-13 08:55 GMT   |   Update On 2022-10-13 08:55 GMT
  • நிலையூர் கால்வாயை பாசன கால்வாயாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.
  • பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன் ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. ஆலோசனை நடத்தினார்.

திருப்பரங்குன்றம்

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பிரச்சினைகள் குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டரிடம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா பல்வேறு கோரிக்கைகள் விடுத்தார்.

அதில் ஒன்றாக நிலையூர் கால்வாயை பாசன கால்வாயாக மாற்றி மற்ற பகுதிகளுக்கு தண்ணீர் திறந்து விடுவதைப்போல திருப்பரங்குன்றம் பகுதிக்கும் நிரந்தரமாக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டரிடம் எம்எல்.ஏ. கோரிக்கை விடுத்திருந்தார்.

அதன் அடிப்படையில் பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் அன்பரசன், உதவி பொறியாளர் சுந்தரமூர்த்தி ஆகியோர் இன்று சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

அப்போது அவர் இப்பகுதியில் நிலையூர் கால்வாயை பாசன கால்வாயாக மாற்றி வைகை அணையில் இருந்து தண்ணீர் கொண்டுவர வேண்டும், திருநகர் அண்ணா பூங்கா மைதானத்தை சிந்தடிக் ஹாக்கி மைதானமாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.

இதற்கு நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்தனர்.

ஆலோசனை யின்போது இளைஞரணி மாவட்ட செயலாளர் வக்கீல் ரமேஷ், ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட துணை செயலாளர் ஓம்.கே. சந்திரன் உள்பட பலர் இருந்தனர்.

Tags:    

Similar News