உள்ளூர் செய்திகள்

புதிய உறுப்பினர் படிவங்களை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வழங்கினார்.அருகில் பேரவை துணைச்செயலாளர் வெற்றிவேல் உள்ளிட்ட பலர் உள்ளனர்.

கூடுதலாக 1 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்

Published On 2023-04-07 08:52 GMT   |   Update On 2023-04-07 08:52 GMT
  • கூடுதலாக 1 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று ஆர்.பி.உதயகுமார் பேசினார்.
  • 3 தொகுதிகளிலும் தலா ஒரு லட்சம் உறுப்பினர்களை இலக்காக வைத்து சேர்க்க வேண்டும்.

மதுரை

அ.தி.மு.க. சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு மற்றும் புதிய உறுப்பினர் சேர்க்கை படிவம் வழங்கும் நிகழ்ச்சி மதுரை புறநகர் மேற்கு மாவட்டங்களில் நடந்தது.

வாடிப்பட்டி, சோழ வந்தான், அலங்காநல்லூர் பகுதிகளில் நீர்மோர் பந்தலை திறந்து, புதிய உறுப்பினர் படிவங்களை மதுரை புறநகர் மேற்கு மாவட்ட செயலாளர், முன்னாள் அமைச்சர்ஆர். பி.உதயகுமார் வழங்கி பேசியதாவது:-

மக்கள் சேவையில் முத்திரை பதிக்கும் வகையில் ஆளுங்கட்சி என்றாலும், எதிர்க்கட்சி என்றாலும் தங்கள் பணியை

அ.தி.மு.க. தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது. ஆனால் தி.மு.க. ஆளுங் கட்சியாக வந்தபோதும் கூட மக்கள் பணி செய்யாமல் தூங்குகிறது.

மக்களின் தாகத்தை தணிக்கும் வகையில் தமிழகம் முழுவதும் பொதுச் செயலாளர் எடப்பாடியாரின் ஆணைக்கிணங்க நீர்,மோர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது. அ.தி.மு.க.வின் 3-வது அத்தியாயமாக, 3-வது தலைமுறையாக எடப்பாடியார் இந்த இயக்கத்திற்கு கிடைத்து ள்ளார். அம்மாவின் மறைவிற்கு பின்பு சுனாமி பேரலையாக அ.தி.மு.க. தத்தளித்த பொழுது, கலங்கரை விளக்கமாக இந்த இயக்கத்திற்கு கிடைத்தார், எடப்பாடியார்.

கடன் பெறமாட்டோம் என்று கூறி இரண்டே ஆண்டில் ரூ.1½ லட்சம் கடனை தமிழகத்திற்கு பெற்றுவிட்டார்கள். இந்த தி.மு.க. ஆட்சியின் அவல நிலைகளை மக்களுக்கு எடுத்துச் சொல்லி தீவிர உறுப்பினர்களை சேர்க்க வேண்டும்.

எம்.ஜி.ஆர். இருக்கும் போது 16 லட்சம் தொண்டர்கள் இருந்தனர். அதனை அம்மா 1½ லட்சம் தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கமாக உருவாக்கினார். தற்போது எடப்பாடியார் 2 கோடி தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கமாக உருவாக்கி புதிய சாதனை படைப்பார்.

அதற்கு மதுரை புறநகர் மேற்கு மாவட்டத்தில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய 3 தொகுதிகளிலும் தலா ஒரு லட்சம் உறுப்பினர்களை இலக்காக வைத்து சேர்க்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News