உள்ளூர் செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசிய காட்சி.

பாலமேட்டில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம்

Published On 2023-05-10 08:51 GMT   |   Update On 2023-05-10 08:51 GMT
  • அலங்காநல்லூர் ஒன்றியம் பாலமேட்டில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
  • அமைச்சரவை மாற்றத்தால் தி.மு.க.வின் பேஸ்மட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது என்று பேசினார்.

மதுரை

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் அலங்காநல்லூர் ஒன்றியம் பாலமேட்டில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது. இதை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்து பேசியதாவது:-

பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, ஆகியோரது பிறந்தநாள் விழாவை திராவிட இயக்க எழுச்சி நாளாகவும், ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும், இளைஞர்கள் எழுச்சி பெருவிழாவாகவும் நடத்தி வருகிறோம்.

அதனைத்தொடர்ந்து இன்றைக்கு 1½ கோடி தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு, 8 கோடி மக்களை பாதுகாத்து வரும் எடப்பாடியாரின் பிறந்தநாள் விழாவை ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி, வறுமை ஒழிப்பு தினமாகவும், இளைஞர் எழுச்சி திரு விழாவாகவும், ஜெயலலிதா பேரவையின் சார்பிலும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழகத்தின் சார்பிலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அ.தி.மு.க. சோதனை யான காலத்தில் அதனை வென்றெடுத்து சாதனைதான் படைத்துள்ளது. தற்போது தி.மு.க.வின் பேஸ்மட்டம் ஆடிக்கொண்டிருக்கிறது. அதை சரி செய்ய அமைச்சரவை மாற்றத்தை முதல்-அமைச்சர் கொண்டு வந்துள்ளார்.

நாட்டின் நிதி அமைச்சர் இன்றைக்கு முதல்- அமைச்சரின் வீட்டு நிதியை கையாளும் ரகசியத்தை கூறியுள்ளார். இதற்கு உரிய பதிலை சொல்ல வேண்டும். அமைச்சரவை மாற்றம் என்பது கண்துடைப்பு நாடகமாகும்.

அதி.மு.க.வை அழிக்க பல்வேறு சூழ்ச்சிகளை ஸ்டாலின் செய்து பி.டீம், சி.டீம் என்பதை இயக்கினார். அந்த டீம் எல்லாம் அதி.மு.க.வின் துரோகத்தின் டீமாக உள்ளது.

அலங்காநல்லூர், பாலமேடு கிராமங்களில் தொன்று தொட்டு ஜல்லிக்கட்டு போட்டி வாடிவாசலில்தான் நடைபெற்று வரும். ஜல்லிக் கட்டு விழாவிற்கு வாடி வாசல் மூடப்படுமா? என்று மக்கள் இன்றைக்கு அச்ச மடைந்துள்ளனர்.

அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டிற்கு மைதானத்தைக் கட்ட யாரும் கோரிக்கை வைக்கவில்லை. பாரம்பரியமாக வாடிவாசல் வழியாக ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தாமல், மூடுவிழா கண்டால் மக்களி டம் இருந்து கடும் கொந்த ளிப்பை தி.மு.க. சந்திக்க வேண்டியது வரும். இன்றைக்கு கலைஞர் நூலகம், கலைஞருக்கு பேனா அமைக்க பணம் இருக்கிறது. ஆனால் அலங்காநல்லூர் சர்க்கரை ஆலை இயக்க பணம் இல்லை என்று கூறு கிறார்கள். கடந்த அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ரூ.22 கோடி வரை சர்க்கரை ஆலைக்கு ஒதுக்கப்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எஸ்.எஸ்.சரவணன், கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News