உள்ளூர் செய்திகள்

அ.தி.மு.க. மாநாடு நடத்துவது தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் தலைமையில் அ.தி.மு.க.வினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத்திடம் மனு அளிக்க வந்தனர். 

அ.தி.மு.க. மாநாடு கின்னஸ் சாதனையில் இடம் பிடிக்கும்

Published On 2023-05-31 09:04 GMT   |   Update On 2023-05-31 09:04 GMT
  • மதுரையில் நடக்கும் அ.தி.மு.க. மாநாடு கின்னஸ் சாதனையில் இடம் பிடிக்கும்.
  • முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டியளித்தார்.

மதுரை

மதுரை மாவட்டம் வளையங்குளம் கருப்பசாமி கோவில் மைதானத்தில் வருகிற ஆகஸ்டு மாதம் 20-ந்தேதி அ.தி.மு.க. மாநாடு நடக்கிறது. இதற்கு அனுமதி கேட்டும், பாதுகாப்பு அளிக்க கோரியும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத்தி டம் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார், எம்.எல்.ஏ.க்கள் ராஜன் செல்லப்பா, பெரிய புள்ளான், தகவல் தொழில் நுட்ப பிரிவின் மதுரை மண்டல செயலாளர் ராஜ் சத்யன் மற்றும் நிர்வாகிகள் மனு அளித்தனர். பின்னர் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறியதா வது:-

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மிகச்சிறப்பாக கட்சியை வழி நடத்தி வருகி றார். ஆகஸ்டு 20-ந்தேதி மதுரை வளையங்குளம் பகுதியில் மிகப்பெரிய அளவில் அ.தி.மு.க. மாநில மாநாடு நடைபெறுகிறது.

இந்த மாநாடு நடத்த அனுமதிக்க கோரியும், பாதுகாப்பு அளிக்க கோரியும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுவிடம் மனு அளித்துள்ளோம். இந்தியாவில் இதுவரை நடக்காத அளவில் இந்த மாநாட்டை நடத்தவும், கின்னஸ் சாதனையில் இடம் பிடிக்க வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் நடத்தப் படும் இந்த மாநாட்டில் 60 லட்சம் அ.தி.மு.க. தொண்டர் கள் பங்கேற்க உள்ளனர்.

இவவாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News