உள்ளூர் செய்திகள்

மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தங்கி செல்போன் திருட்டில் ஈடுபட்ட முதியவர்

Published On 2023-03-24 08:46 GMT   |   Update On 2023-03-24 08:46 GMT
  • மதுரை அரசு ஆஸ்பத்திரியில் தங்கி செல்போன் திருட்டில் ஈடுபட்ட முதியவரை தனிப்படை போலீசார் பிடித்தனர்.
  • இது தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை

மதுரை அனுப்பானடி, டீச்சர்ஸ் காலனியை சேர்ந்தவர் நவீன் குமார் (வயது29), இவரது தாய்க்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட தால் அவரை மதுரை அரசு மருத்துவமனையில் அனும தித்தனர். நவீன்குமார், தாய்க்கு உதவியாக ஆஸ்பத்திரி வளாகத்தில் தங்கியிருந்தார். அவர் இரவு படுத்து தூங்கியபோது மர்ம நபர் செல்போனை திருடிச் சென்று விட்டார்.

இதுபற்றி அறிந்த நவீன்குமார் மதுரை அரசு ஆஸ்பத்திரி போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் விசா ரணை நடத்தினர்.

மேலும் ஆஸ்பத்திரியில் அடிக்கடி செல்போன் திருட்டு நடந்து வந்ததால் இதில் சம்பந்தப்பட்ட நபரை பிடிக்க வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர் உத்தர விட்டார். அதன்பேரில் மாநகர வடக்கு துணை கமிஷனர் அரவிந்த் மேற்பார்வையில், தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார் ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள கண்காணிப்பு காமிரா காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

இதில் நவீன்குமாரின் செல்போனை ஒரு முதியவர் திருடிச்செல்லும் காட்சி பதிவாகி இருந்தது. அதை வைத்து போலீசார் செல்போன் திருட்டில் ஈடுபட்ட விவேகானந்தன்(59) என்பவரை கைது செய்தனர். அவர் திருடிய செல்போனை போலீசார் மீட்டு நவீன்குமா ரிடம் ஒப்படைத்தனர். போலீசில் சிக்கிய முதியவர் அரசு ஆஸ்பத்திரியில் அடிக்கடி தங்கி செல்போன் திருட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அவரிடம் போலீசார் தொடர்ந்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News