உள்ளூர் செய்திகள்

தென்னோலைக்கார தெருவில் நிரம்பி வழியும் பாதாள சாக்கடை

Published On 2023-09-23 09:57 GMT   |   Update On 2023-09-23 09:57 GMT
  • தென்னோலைக்கார தெருவில் நிரம்பி வழியும் பாதாள சாக்கடையால் நோய் பரவும் அபாயம் நிலவுகிறது.
  • கடும் துர்நாற்றம் வீசுகிறது.

மதுரை

மதுரை மாநகராட்சியில் பல்வேறு பகுதிகளில் பாதாள சாக்கடை நிரம்பி வழிகிறது. இதனால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. மதுரை நகரின் மையப் பகுதியான தெற்கு கிருஷ்ணன் கோவில் தெருவில் உள்ள தென் னோலைக்கார தெருவில் கடந்த சில மாதங்களாக அடிக்கடி பாதாள சாக்கடை நிரம்பி வெளி யேறுவது வாடிக்கை யாக உள்ளது.

இதனால் தெருவில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து உள்ளனர். சாக்கடை நீர் நிரம்பி வீட்டின் வாசலில் தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக அந்த தெருவில் கடும் துர்நாற்றம் வீசுகிறது. தற்போதும் தென்னோலைக் கார தெருவில் இதே சூழ்நிலை நிலவுகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. அங்குள்ள பாதாள சாக்கடையை முழுமையாக சுத்தம் செய்யாமல் நிரம்பும்போது மட்டும் மேற்புறமாக சுத்தம் செய்துவிட்டு செல்வதால் இந்த பிரச்சனை தொடர்ந்து நீடிப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

மேலும் அந்த தெருவில் குப்பைகளும் கழிவுகளும் அதிக அளவில் தேங்கி கிடக்கின்றன. கழிவு நீர் தேக்கம், சுகாதார சீர்கேடு காரணமாக கொசு அதிகமாகி டெங்கு பரவலுக்கு வழிவகுப்பதாக அமைந்துள்ளது.

இது குறித்த அப்பகுதி மக்கள் கூறுகையில், தென்னோலை கார தெருவில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்கு அடிக்கடி பாதாள சாக்கடை நிரம்பி வருகிறது. இது தொடர்பாக பலமுறை புகார் அளித்தோம். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் கண்டும், காணாமல் இருப்பதாக வேதனையுடன் தெரிவித்தனர்.

Tags:    

Similar News