- விழிப்புணர்வு சதுரங்கப்போட்டி நடந்தது.
- 44-வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டி தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது.
மதுரை
செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் 44-வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டி வருகிற 28-ந்தேதி முதல் ஆகஸ்ட் 10-ந்தேதி வரை நடைபெற உள்ளது. இதில், 187 நாடுகளைச் சேர்ந்த 2,500 வீரர்கள் பங்கேற்க உள்ளனர். இதையொட்டி முதல்- அமைச்சர் விளையாட்டுப்போட்டி தொடர்பான முன்னேற்பாடு பணிகளை நேரடியாக ஆய்வு செய்து, அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் 44-வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டி தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. அதன்படி திருப்பரங்குன்றம் அருகே உள்ள ராஜன் பள்ளியில் மாவட்ட அளவிலான செஸ் போட்டி நடத்தப்பட்டது. போட்டியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது. இப்போட்டிக்கான முன்னேற்பாடு பணிகள் அனைத்தும் மதுரை மாவட்ட விளையாட்டு அலுவலகம், மதுரை மாவட்ட சதுரங்க கழகம் மற்றும் திருப்பரங்குன்றம் வட்ட அளவிலான சதுரங்க கழகம் ஒருங்கிணைந்து செய்திருந்தன.