உள்ளூர் செய்திகள்
- மதுரை தாதம்பட்டியில் பால விநாயகர் கோவில் மண்டல பூஜை நடந்தது.
- இந்த சிறப்பு பூஜையை மீனாட்சி அம்மன் கோவில் சிவாச்சாரியார் கிருஷ்ணகுமார் செய்தார்.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூராட்சி 8-வது வார்டு தாதம்பட்டி சடையாண்டி கோவில் வளாகத்தில் பால விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந்தேதி நடந்தது. இதனை தொடர்ந்து தினமும் மண்டலபூஜை நடந்து வந்தது. 48-வது நாளான நேற்று மண்டல பூஜை நிறைவடைந்தது. இதையொட்டி வெள்ளை நிறபால விநாயகருக்கு பால், பன்னீர், தேன், நெய், திரவிய பொடி, திருநீர் உள்ளிட்ட பலவகை அபிஷேகங்கள் செய்து தீபாராதனை நடந்தது. விநாயகர் ராஜ அலங்காரத்தில் அருள் பாலித்தார். இந்த சிறப்பு பூஜையை மீனாட்சி அம்மன் கோவில் சிவாச்சாரியார் கிருஷ்ணகுமார் செய்தார்.