உள்ளூர் செய்திகள்

பேச்சுப்போட்டியை கலெக்டர் அனீஷ்சேகர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அருகில் மாநில ஒருங்கிணைப்பாளர் அழகிரிசாமி மற்றும் பலர் உள்ளனர். 

புத்தக வாசிப்பு தனிமனிதனை பண்பட்ட நபராக உருவாக்குகிறது- கலெக்டர் பேச்சு

Published On 2023-04-06 09:13 GMT   |   Update On 2023-04-06 09:13 GMT
  • புத்தக வாசிப்பு தனிமனிதனை பண்பட்ட நபராக உருவாக்குகிறது என்று கலெக்டர் அனீஷ்சேகர் பேசினார்.
  • ஒருங்கிணைப்பாளர் அழகிரிசாமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

மதுரை

மதுரை பரவையில் உள்ள தனியார் அறிவியல் கல்லூரியில் மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் மாணவர்களுக்கான பேச்சுப்போட்டியை கலெக்டர் அனீஷ்சேகர் தொடங்கி வைத்தார். அவர் பேசியதாவது:-

தமிழ்நாடு அரசு இளைஞர்களின் நலனை கருத்திற்கொண்டு அவர்களது தனித்திறனை மேம்படுத்துவதற்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. எந்தவொரு சமூகத்தின் வளர்ச்சிக்கும் இளைஞர்க ளின் ஆற்றல் மிக முக்கியமானதாகும்.

அந்த வகையில் இளைஞர்களின் படைப்பாற்றலை மெருகேற்றிடவும், தமிழ் இலக்கியங்கள் மீதான ஆர்வத்தை அதிகரித்திடும் வகையில் தமிழ்நாடு அரசு பல்வேறு முன்னெடுப்புகளை செயல்படுத்தி உள்ளது.

குறிப்பாக தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் புத்தக திருவிழா நடத்தப்படுகிறது.

புத்தக வாசிப்பு தனிமனிதனை பண்பட்ட நபராக உருவாக்கு கிறது. சமூக பொறுப்புணர்வு கொண்ட நபராக மேம் படுத்துகிறது. அதேபோல் இளைஞர்கள் தமிழ் மொழியில் சிறந்து விளங்கும் பல்வேறு ஆளுமைகள், எழுத்தாளர்களுடன் நேரடியாக கலந்து ரையாடி தங்களது படைப்பாற்றலை மேம்படுத்திட வாய்ப்பளித்திடும் வகையில் இளைஞர்கள் இலக்கிய பயிற்சிப்பட்டறை, இலக்கியத்திருவிழா போன்ற நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் அழகிரிசாமி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News