உள்ளூர் செய்திகள்

கரு.கருப்பையா

வைகாசி மாதம் புது வீடு கட்ட தொடங்கலாமா?

Published On 2023-05-10 08:27 GMT   |   Update On 2023-05-10 08:27 GMT
  • வைகாசி மாதம் புது வீடு கட்டுவது தொடர்பாக பிரபல ஜோதிடர் கரு.கருப்பையா விளக்கமளித்தார்.
  • கட்டிட வேலைகள் தள்ளி போகலாம் அல்லது பணப்பிரச்சனை, காரியத்தடை வரலாம் என்றார்.

மதுரை

பிரபல ஜோதிடர் மடப்புரம் விலக்கு கரு.கருப்பையா வீடு கட்டுவது தொடர்பாக கூறியதாவது:-

பொதுவாக தை மாதத்திற்கு பிறகு மாசி, பங்குனி, புது வீடு கட்ட தொடங்க மாட்டார்கள். ஆனால் எல்லோரும் வைகாசி மாதத்தில் புது வீடு கட்ட தொடங்குவது வழக்கமாகும். சித்திரை மாதத்தில் சிலர் திருமணம் செய்வார்கள். வைகாசி மாதம் சுப காரியங்கள் செய்யலாமா? என்றால் தாராளமாக செய்யலாம். ஆனால் புது வீடு கட்ட தொடங்கலாமா? என்றால் சற்று யோசித்து தான் செயல்பட வேண்டுமாம். ஏனென்றால் வைகாசி மாதம் புதியதாக வீடு கட்ட தொடங்கினால், கட்டட வேலைகள் தள்ளி போகலாம் அல்லது பணப்பிரச்சனை, காரியத்தடை வரலாமாம்.

கிரகப்பிரவேசம் வைப்பதிலும் தாமதம் ஏற்படலாமாம். ஆனால் வைகாசி மாதம் புதியதாக உள்ள வீட்டில் தாராளமாக குடி போகலாம். வீடு கட்ட தொடங்குவதை மட்டும் வைகாசி மாதத்தில் தவிர்ப்பது நல்லது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News