கோவை-மதுரை சிறப்பு ரெயில் சேவை இன்று தொடக்கம்
- கோவை-மதுரை சிறப்பு ரெயில் சேவை இன்று தொடக்கம்
- இதன் மூலம் மதுரை-கோவை விரைவு ெரயிலின் பயண நேரம் 30 நிமிடம் குறைக்கப்பட்டு உள்ளது.
மதுரை
மதுரை - பழனி இடையே ஒரு விரைவு சிறப்பு ரெயிலும், பழனி - கோவை இடையே ஒரு சிறப்பு ரெயிலும் தனித்தனியாக இயக்கப்பட்டு வந்தன. மேற்கண்ட இரண்டையும் ஒரே எக்ஸ்பிரஸ் ெரயிலாக மாற்றுவது என்று தென்னக ரெயில்வே முடிவு செய்தது. அதன்படி மதுரை- கோவை இடையே நிரந்தர சிறப்பு எக்ஸ்பிரஸ் ரெயில் அறிவிக்கப்பட்டது.
அந்த ரெயில் இன்று காலை 7.25 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு, மதியம் 12.45 மணிக்கு கோவை சென்றது. மறுமார்க்கத்தில் கோவையில் இருந்து மதியம் 2.05 மணிக்கு புறப்பட்ட சிறப்பு ரெயில், இன்று இரவு 7.35 மணிக்கு மதுரை வருகிறது.
மதுரை-கோவை சிறப்பு ரெயில் கூடல்நகர், சமயநல்லூர், சோழவந்தான், வாடிப்பட்டி, கொடைக்கானல் ரோடு, அம்பாத்துரை, திண்டுக்கல், அக்கரைப்பட்டி, ஒட்டன்சத்திரம், சத்திரப்பட்டி, பழனி, புஷ்பத்தூர், மடத்துக்குளம், மைவாடி ரோடு, உடுமலைப்பேட்டை, கோமங்களம், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, போத்தனூர் ஆகிய நிலையங்களில் நின்று சென்றது. இதன் மூலம் மதுரை- கோவை விரைவு ெரயிலின் பயண நேரம் 30 நிமிடம் குறைக்கப்பட்டு உள்ளது.