உள்ளூர் செய்திகள்
- காரில் வந்த கும்பல் சத்யபிரகாஷை கத்தியால் குத்தி உருட்டுக்கட்டையால் தாக்கியது.
- டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை
மதுரை மாவட்டம் பேரையூர் சமத்துவ புரத்தை சேர்ந்தவர் சங்கரன். இவரது மகன் சத்யபிரகாஷ் (வயது23). கல்லூரி மாணவரான இவர் சம்பவத்தன்று ஆடுகளை மேய்த்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு கார் ஆடுகள் மீது மோதுவது போல் சென்றது. இதனை சத்யபிரகாஷ் தட்டி கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த காரில் வந்த கும்பல் சத்யபிரகாஷை கத்தியால் குத்தி உருட்டுக்க ட்டையால் தாக்கியது.
இதுகுறித்த புகாரின் பேரில் டி.கல்லுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அதே பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியர் பாலமுருகன், பாறைப்பட்டி முனியாண்டி உள்பட 4 பேரிடம் விசார ணை நடத்தி வருகின்றனர்.