உள்ளூர் செய்திகள்

சிறு பாலங்கள் கட்டும் பணி தொடக்கம்

Published On 2022-11-26 06:32 GMT   |   Update On 2022-11-26 06:42 GMT
  • வாடிப்பட்டி அருகே ரூ.56.50 லட்சம் மதிப்பீட்டில் சிறு பாலங்கள் கட்டும் பணி பூமி பூஜையுடன் தொடங்கியது.
  • கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் சிறுபாலம் துண்டிக்கப்பட்டது.

வாடிப்பட்டி

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே போடிநாயக்கன்பட்டி கோட்டைமேடு செல்லும் சாலையில் கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் சிறுபாலம் துண்டிக்கப்பட்டது.

இதனால் அந்தவழியாக நாச்சிகுளம் பஞ்சாயத்து உட்பட்ட நரிமேடு கிராமத்திற்கும் கருப்பட்டி, இரும்பாடி, சோழவந்தான் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வந்தனர். இது பற்றி தகவல் அறிந்த வெங்கடேசன் எம்.எல்.ஏ., இடிந்து விழுந்த அந்த சிறு பாலத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து போர்க்கால அடிப்படையில் விரைந்து கட்டிட நடவடிக்கை எடுக்க மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தார்.

அதன்படி வாடி பட்டி ஊராட்சி ஒன்றியம் கருப்பட்டி பஞ்சாயத்துகுட்பட்ட பொம்மன்பட்டி-கருப்பட்டி இடையே மாவட்ட கலெக்டரின் உத்தரவின்படி மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் ரூ.18.50 லட்சம் மதிப்பீட்டில் சிறு பாலமும், நாச்சிகுளம் பஞ்சாயத்துக்குட்பட்ட பகுதியில் நரிமேடு செல்ல போடிநாயக்கன்பட்டி கோட்டைமேடு சாலையில் ரூ.38 லட்சம் மதிப்பீட்டில் சிறுபாலமும் அமைக்க திட்ட மதிப்பீடு செய்யப்பட்டது.

இந்த சிறுபாலங்கள் கட்டிட கட்டுமான பணி க்கான பூமி பூஜை நடந்தது.

இந்த பூஜைக்கு வெங்கடேசன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பணிகளை தொடங்கி வைத்தார். இதில் யூனியன் கமிஷனர் கதிரவன், ஒன்றிய பொறியாளர் ராதா, ஒன்றிய செயலாளர்கள் பால. ராஜேந்திரன், பசும்பொன் மாறன், பேரூர் செயலாளரும் பேரூராட்சித் தலைவருமான பால்பா ண்டியன், பேரூராட்சி துணைத் தலைவர் கார்த்திக், தி.மு.க.நிர்வாகிகள் பிரகாஷ், மோகன், முரளி, வினோத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News