ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்
- அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.
- கலெக்டர் தெரிவித்தார்.
மதுரை
மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ் சேகர் விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் முறையே வருகிற 15, 16, 17 ஆகிய தேதிகளில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளன. இந்த போட்டிகள் தமிழக அரசு அறிவித்துள்ள கொரோனா தடுப்பு நிலையான வழி காட்டு நெறிமுறைகளின் அடிப்படையில் நடத்தப்படும்.
ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் மாடுபிடி வீரர்கள் madurai.nic.in என்ற இணைய தளத்தில், தங்களது பெயர்களை பதிவு செய்து, பாஸ்போர்ட் புகைப்படம், 2 தவணை கொரோனா செலுத்தியதற்கான சான்று, வயது சான்று ஆகியவற் றை பதிவேற்றம் செய்ய வேண் டும். இதேபோல ஜல்லிக்கட் டில் பங்கேற்கும் மாடுகள் குறித்த விவரங்களையும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
பதிவு செய்தவர்களின் சான்றுகள் சரிபார்க் கப்பட்ட பிறகு, தகுதி யான நபர்களுக்கு இைணய தளத்தில் டோக்கன் பதிவேற்றப்படும். இந்த டோக்கனை பதிவிறக்கம் செய்தவர்கள் மட்டுமே ஜல்லிக்கட்டில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்.
இதேபோல, ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் ஒரு காளையுடன் அதன் உரிமையாளர் ஒருவர், உதவியாளர் ஒருவர் என இருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். இருவரும் 2 தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திய சான்று பெற்றிருக்க வேண்டும்.
மேலும் காளையுடன் அனுமதிக்கப்படுபவர்கள், மாடுபிடிவீரர்கள், பார்வை யாளர்கள் போட்டி நடைபெறும் தேதியில் இருந்து 2 நாட்களுக்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்து தொற்று இல்லை என்பதை உறுதி செய்த சான்றை கொண்டு வர வேண்டும்.
ஜல்லிக்கட்டு, மஞ்சு விரட்டு, வடமாடு விளை யாட்டுகளில் 300 மாடுபிடி வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். எருதுவிடும் நிகழ்ச்சியில் 150 வீரர் களுக்கு மிகாமல் பங்கேற்கலாம். கொரோனா தடுப்பு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளுக்கு உட்பட்டே பார்வையா ளர்கள் அனுமதிக்கப் படுவார்கள்.
திறந்தவெளி அரங்கின் அளவுக்கேற்ப சமூக இடைவெளியுடன் 150 பார்வை யாளர்கள் அல்லது அனுமதிக்கப் பட்ட இருக்கைகளில் 50 சதவீதத்திற்கும் மிகாத எண்ணிக்கையிலான பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.