உள்ளூர் செய்திகள்

கடத்தல்காரருக்கு சுங்கத்துறை அதிகாரிகள் வலைவீச்சு

Published On 2022-09-02 08:35 GMT   |   Update On 2022-09-02 08:35 GMT
  • மதுரை விமான நிலைய குப்பைத்தொட்டியில் தங்ககட்டி கிடந்தது.
  • இது தொடர்பாக கடத்தல்காரர்களை, சுங்கத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர்.

அவனியாபுரம்

துபாயில் இருந்து மதுரைக்கு தினமும் விமான சேவை நடைபெற்று வருகிறது. நேற்று காலை துபாயில் இருந்து மதுரை வந்த விமானத்தில் 170 பயணிகள் வந்தனர்.

இதில் பயணம் செய்த ஒருவர் தன்னிடமிருந்த பேஸ்ட் போன்ற பொருளை குப்பைத் தொட்டியில் வீசி சென்றார். இதனை பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படைவீரர் கண்டுபிடித்து சுங்கத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

சுங்கத்துறை அதிகாரிகள் அந்த பொருளை கைப்பற்றி சோதனை செய்தனர். அதில் ரூ.14 லட்சத்து 36 ஆயிரத்து 472 மதிப்புள்ள 281 கிராம் தங்கம் இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து விமானத்தில் வந்த பயணியை அடையாளம் காணும் வகையில் வீடியோ பதிவுகளை பார்வையிட்டு கடத்தல்காரரை சுங்கத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். மதுரை விமான நிலை யத்தில் தங்கத்தை குப்பைத்தொட்டியில் வீசி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News