உள்ளூர் செய்திகள்

நைஸ் ரக கைத்தறி நெசவாளர்களுக்கு 40 சதவீத கூலி உயர்வு வழங்குமாறு வலியுறுத்தல்

Published On 2022-09-08 08:57 GMT   |   Update On 2022-09-08 08:57 GMT
  • நைஸ் ரக கைத்தறி நெசவாளர்களுக்கு 40 சதவீத கூலி உயர்வு வழங்க வேண்டும் என கலெக்டரிடம் வலியுறுத்தப்பட்டது.
  • வாடகை உயர்வு காரணமாக மிக சிரமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர் .

மதுரை

மதுரை அனைத்து நைஸ்ரக கைத்தறி தொழிற்சங்க ஐக்கிய குழு தலைவர் கே .என் .கோபிநாத் ,செயலாளர் என்.ஆர்.சுதர்சன், பொருளாளர் ஏ.எஸ்.ரவீந்திரன், இணைச் செயலாளர் டி.ஆர்.பத்மநாபன், துணை த்தலைவர்கள் ஈஸ்வரன், ஜெகன் நாதன், துணை செயலாளர் தாமோதரன் ஆகியோர் மதுரை மாவட்ட கலெக்டர் அனீஷ்சேகரை சந்தித்து கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-

மதுரை டவுன் ,மதுரை புறநகர் ,கைத்தறி நகர், சக்கிமங்கலம், வண்டியூர், பெருங்குடி, அவனியாபுரம், திருநகர், பாம்பன் நகர், கடச்சனேந்தல், சீனிவாசா காலனி, எஸ் .கே .டி .நகர் மற்றும் பல பகுதிகளில் நைஸ் ரக கைத்தறி ஜவுளி ரகமான வேஷ்டி ,கோடம்பாக்கம் ரக சேலைகள் மற்றும் பட்டுச் சேலைகள் உற்பத்தி செய்யும் நெசவு தொழிலாளர்கள் உள்ளனர்.

அவர்கள் தற்போது அத்வாசியமான பொருட்களின் கடுமையான விலை உயர்வு, வாடகை உயர்வு காரணமாக மிக சிரமான சூழ்நிலையில் வாழ்ந்து வருகின்றனர் .

மாற்று வேலை வாய்ப்பு இன்றி வாழ்க்கை நடத்த கஷ்டப்படும் நெசவு தொழிலாளர்களின் கூலி உயர்வு மற்றும் போனஸ் உயர்வு சம்பந்தமான ஒப்பந்தம் வருகிற 23.10.2022 அன்றுடன் காலாவதி ஆகிறது.

எனவே வருகிற தீபாவளி பண்டிகை (24.10.2022)-ந் தேதி முதல் கைத்தறி நெசவு தொழிலாளர்களுக்கு ஏற்கனவே உள்ள கூலி பட்டியலுக்கு மேல் 40 சதவீதம் கூலி உயர்வு, தீபாவளி போனஸ் 20 சதவீதம் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News