சோழவந்தானில் ஜனநாயக மாதர் சங்க மாவட்ட மாநாடு
- சோழவந்தானில் ஜனநாயக மாதர் சங்க மாவட்ட மாநாடு நடந்தது.
- அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர்.
சோழவந்தான்
சோழவந்தானில் அனைந்திய ஜனநாயக மாதர் சங்க மதுரை புறநகர் மாவட்ட 16-வது மாநாடு நடந்தது. மாவட்டத் தலைவர் பிரேமலதா தலைமை தாங்கினார். நிர்வாகிகள் அட்சயா, மகாலட்சுமி முன்னிலை வகித்தனர். வரவேற்புக் குழு தலைவர் வேல்பாண்டி வரவேற்றார்.
அமர்தவள்ளி அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநிலச் செயலாளர் லட்சுமி மாநாட்டை தொடங்கி வைத்துபேசினார். புறநகர் மாவட்டச் செயலாளர் முத்துராணி வேலை அறிக்கை சமர்பித்தார். மாவட்டப் பொருளாளர் பர்வதவர்த்தினி வரவு -செலவு அறிக்கை வாசித்தார். மாதர் சங்க மாநிலச் செயலாளர் பொன்னுத்தாய், மாநில நிர்வாகி சசிகலா, மாநிலத் தலைவர் வாலண்டினா ஆகியோர் பேசினர். மாவட்டக் குழு துணைத் தலைவர் மோகனவிஜயா நன்றி கூறினார். பின்பு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு நடந்தது. முன்னதாக மாநாட்டு அரங்கத்தில் இருந்து பேரணியாக புறப்பட்டனர்.
அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை குறைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர்.
சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் கோவில் அருகே சங்க கொடி ஏற்றப்பட்டது.