உள்ளூர் செய்திகள் (District)

பூத் கமிட்டி கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டார்.

தாலிக்கு தங்கம் திட்டத்தை தி.மு.க. அரசு நிறுத்தியது ஏன்?-ஆர்.பி.உதயகுமார்

Published On 2023-10-05 08:32 GMT   |   Update On 2023-10-05 08:32 GMT
  • தாலிக்கு தங்கம் திட்டத்தை தி.மு.க. அரசு நிறுத்தியது ஏன்? என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கேள்வி எழுப்பினார்.
  • மக்கள் சேவையில் முதன்மையாக இருந்து வருகிறது.

மதுரை

மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் கள்ளிக்குடி கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி கூட்டம் கூடக்கோயில், மேல உப்பிலி குண்டு, கல்லணை, கொக்குளம், வேப்பங்குளம், மருதங்குடி ஆகிய பகுதி களில் நடைபெற்றது. இதற்கு ஒன்றிய செயலாளர் வேப்பங்குளம் கண்ணன் தலைமை தாங்கினார். முகாமை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதய குமார் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட அவைத் தலைவர் முருகன், முன்னாள் எம்.எல்.ஏ. கே.மாணிக்கம், மாநில அம்மா பேரவை துணை செயலாளர் வெற்றிவேல், மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி இணைச் செயலாளர் சிவசுப்பிர மணியன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செய லாளர் துரைப்பாண்டி, மாவட்ட மீனவரணி செயலாளர் சரவணபாண்டி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு செயலாளர் சிங்கராஜ பாண்டியன், ஒன்றிய செயலாளர்கள் ராமையா, பிரபுசங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் உதயகுமார் பேசியதாவது:-

அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தாலும் சரி, இல்லை என்றாலும் சரி மக்கள் சேவையில் முதன்மையாக இருந்து வருகிறது.

பெண் கல்வியை ஊக்குவிக்க தாலிக்கு தங்கம் திட்டத்தை ஜெயலலிதா கொண்டு வந்து, அதன் மூலம் தாலிக்கு 8 கிராம் தங்கம், படித்த பெண்களுக்கு 25 ஆயிரம் ரூபாய், பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு 50 ஆயிரம் வழங்கினார். இதன் மூலம் 12 லட்சத்து 51 ஆயிரம் ஏழை பெண்கள் பயன் அடைந்தனர். இன்றைக்கு அந்த திட்டத்தை தி.மு.க. அரசு நிறுத்திவிட்டது. இதற்கு என்ன காரணம்?

தி.மு.க. அரசு ரூ.3 லட்சம் கோடி கடன் வாங்கி இருக்கிறது. இந்தியாவி லேயே கடன் வாங்கிய மாநிலத்தில் முதன்மை மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News