உள்ளூர் செய்திகள் (District)

மாற்றுத்திறனாளியிடம் இருந்து பெறப்பட்ட மனு.

மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம்

Published On 2022-07-11 07:37 GMT   |   Update On 2022-07-11 07:37 GMT
  • வாடிப்பட்டியில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது.
  • தாசில்தார் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

வாடிப்பட்டி

வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் குறைதீர்க்கும் கூட்டம் நடந்தது. தாசில்தார் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். தலைமையிடத்து துணை தாசில்தார்கள் நாகேந்திரன், மணிகண்டன், ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.

சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் பாண்டிய கீர்த்தி வரவேற்றார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ரவிச் சந்திரன் கோரிக்கை மனுக்கள் பெற்றார். மண்டல துணை தாசில் தார்கள் செந்தில், திருமுருகன், பேரூராட்சி செயல் அலுவலர் சண்முகம், மாற்றுதிறனாளிகள் நல சங்க மாவட்ட செயலாளர் சேகர், ஒன்றிய செயலாளர் ஆறுமுகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 132 மனுக்கள்பெறப்பட்டன. வட்ட வழங்கல் அலுவலர் மீனாட்சி நன்றி கூறினார். இந்த குறை தீர்க்கும் கூட்டம் நடப்பது பற்றி 2 அல்லது 3 நாட்களுக்கு முன்பு தகவல் தெரிவித்து இருந்தால் அதிக அளவில் பயனாளிகள் பயன்பெறுவார்கள். ஆனால் திடீரென்று ஏற்பாடு செய்ததால் குறைந்த அளவில் மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர்.

வரும் காலங்களில் அதிகாரிகள் கடமைக்கு செய்யாமல் கடமையை செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்தனர்.

Tags:    

Similar News