சண்டிகேசுவரர், அய்யனார் சிற்பங்கள் கண்டெடுப்பு
- 10-ம் நூற்றாண்டை சேர்ந்த சண்டிகேசுவரர், அய்யனார் சிற்பங்கள் கண்டெடுக்கப்பட்டது.
- சண்டிகேசுவரர் சிற்பம் கருப்பணசாமி கோவிலில் இருளப்பசாமியாக வழிபட்டதாக தெரிகிறது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே உள்ள கூடக்கோவில் கண்மாய் கரையில் அமைந்துள்ள கருப்பணசாமி கோவிலில் பழமையான சிற்பங்கள் இருப்பதாக நாகரத்தினம் அங்காளம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்றுத்துறை மாண வர்களுக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து அந்த கல்லூரியின் வர லாற்றுத்துறை பேராசிரிய ரும் பாண்டியநாடு பண் பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளருமான தாமரைக்கண்ணன், ஸ்ரீதர் ஆகியோர் கூடக் கோவில் சென்று கள ஆய்வு மேற் கொண்டனர். அப்போது 10-ம் நூற்றாண்டை சேர்ந்த சண்டிகேசுவரர் மற்றும் அய்யனார் சிற்பங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
இது குறித்து தொல்லியல் கள ஆய்வாளர்கள் கூறுகை யில், இந்த சிற்பங்கள் பாண்டியர்கள் காலத்து கலைநயத்துடன் வடிவமைக் கப்பட்ட சண்டிகேசுவரர், அய்யனார் சிற்பம் ஆகும்.
இந்த 2 சிற்பங்களின் வடிவமைப்பை வைத்து பார்க்கும்போது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பகுதியில் சிவன்கோவில் இருந்திருக்க வேண்டும் என தெரியவருகிறது. சண்டிகேசுவரர் சிற்பம் கருப்பணசாமி கோவிலில் இருளப்பசாமியாக வழிபட்டதாக தெரிகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.