முற்கால பாண்டியர் கால அய்யனார் சிற்பம் கண்டெடுப்பு
- முற்கால பாண்டியர் கால அய்யனார் சிற்பம் கண்டெடுக்கப்பட்டது.
- முற்கால பாண்டியர்களின் கைவண்ணத்தில் உருவான யானை சிற்பமும் இடம் பெற்றுள்ளது.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே திருமால் கிராமத்தில் பழமையான சிலைகள் இருப்பதாக நாக ரத்தினம் அங்காளம்மாள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வரலாற்று துறை மாணவன் சிலம்பரசன் கொடுத்த தகவ லின் படி அந்த கல்லூரி யின் வரலாற்றுத்துறை உதவிப் பேராசிரியரும் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாள ருமான தாமரைக் கண்ணன் மற்றும் பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் ஆய்வாளர் ஸ்ரீதர் போன்றோர் அங்கு சென்று களம் மேற்பரப்பாய்வு செய்தனர்.
அப்போது அந்த சிலைகள் ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்ட முற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த சிற்பங்கள் என்பது தெரியவந்தது. இது குறித்து அவர்கள் கூறிய தாவது:-
பொதுவாக அய்யனார் சிற்பங்கள் நீர்நிலைகள் ஓரமாக அதிகம் கிடைத்து வருகின்றன. தற்போது கண்டறிந்த சிற்பமும் கண்மாயின் கரை ஓரமாக உள்ளது. இந்த சிற்பம் மூன்றடி உயரமும், இரண்டடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப் பட்டுள்ளது. தலைப்பகுதி மகுடத்துடன் விரிந்த ஜடா பாரத்துடனும், கழுத்தில் ஆபர ணமும், மார்பில் முப்புரிநூலும், கைகளில் கை வளையல் களுடனும், வலது கரத்தில் பூச்சென்டினை பிடித்தபடி சிற்பம் நேர்த்தியாக வடிக்கப்பட்டு உள்ளது. இடது காலை குத்தவைத்தும் வலது காலை கீழே தொங்க விட்டும் உட்புதிஹாசன கோளத்தில் அமர்ந்தபடி அய்யனார் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
அய்யனார் சிற்பத்தை மையமாகக் கொண்டு 2 பெண் சிற்பங்கள் இடம் பெற்றுள்ளன. அவை பூரண கலை மற்றும் புஷ்கலை சிற்பங்கள் ஆகும். தத்தம் வலது கைகளில் பூச்சென்டினை பிடித்தபடியும் இடது கையினை ஹடிஹஸ்த மாக வைத்துள்ளனர். வலது காலினை மடக்கியும் இடது காலை கீழே தொங்கவிட்டும் சுஹாசன கோளத்தில் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
மேற்கண்ட சிற்பங்களின் வடிவமைப்பை வைத்துப் பார்க்கும்போது முற்கால பாண்டியர்களின் கலைநயத்தில் உருவானவைகளாக கருதலாம். இந்த சிற்பங்களுக்கு நேர் எதிரே முற்கால பாண்டியர்களின் கைவண்ணத்தில் உருவான யானை சிற்பமும் இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.