உள்ளூர் செய்திகள் (District)

செங்கப்படையில் அரசின் சாதனைகளை விளக்கி மாவட்ட செயலாளர் மணிமாறன் பேசினார்.

தி.மு.க ஆலோசனை கூட்டம்

Published On 2022-06-22 08:19 GMT   |   Update On 2022-06-22 08:19 GMT
  • தி.மு.க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
  • கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார்.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட செங்கப்படை பகுதியில் அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் அன்னலட்சுமி சமீபத்தில் மரணமடைந்தார். இதனையொட்டி இந்த வார்டில் தற்போது இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த தேர்தலில் தி.மு.க. வேட்பாளரை வெற்றி பெற செய்யும் வகையில் செங்கபடை தெற்குமாவட்ட செயலாளா் மணிமாறன் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் மணிமாறன் பேசிய தாவது:-

கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் செங்கபடை பகுதிக்கு எந்த ஒரு வளர்ச்சி திட்டமும் இல்லை. இந்த வார்டில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. கடந்த ஓராண்டு தி.மு.க. ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்களை அரசு செய்துள்ளது. மகளிரு க்கான இலவச பஸ் வசதி, கூட்டுறவு வங்கியில் நகை கடன் ரத்து, புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கி தந்துள்ளது.

இன்னும் 6 மாதகாலத்தில் அனைத்து அடிப்படை பிரச்சினைகளுக்கும் தீர்வு காணப்படும். உங்களின் அடிப்படை வசதிகளை உடனடியாக செய்து தரப்படும். இங்கு நடைபெற உள்ள இடைத்தேர்தலில் தி.மு.க. வேட்பாளர் அமோகவெற்றி பெறுவார்.

இவ்வாறு அவர் பேசினார்.

கள்ளிக்குடி ஒன்றிய செயலாளர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். அவைத்தலைவர் நாக ராஜன், பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், திருமங்கலம் நகரசெயலாளர் ஸ்ரீதர், நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத்த லைவர் ஆதவன்அதியமான், அணிஅமைப்பாளர்கள் மதன்குமார், பாசபிரபு, வினோத், மாவட்ட கவுன்சி லர்கள் கிருத்திகா தங்க பாண்டி, வசந்தா சரவண பாண்டி, முன்னாள் ஒன்றிய தலைவர் கொடிசந்திரசேகர், முன்னாள் ஒன்றிய செய லாளர் ஆதிமூலம், ஒன்றிய இளைஞரணி சூரிசுரேஷ், ஒன்றிய பிரதிநிதி சாய் பாண்டியராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக செங்கப்ப டை கிராமத்தில் பொதும க்களிடம் அரசின் சாதனை கள் குறித்து மாவட்ட செய லாளர் மணிமாறன் பேசினார்.

Tags:    

Similar News