கிழக்கு மண்டல புதிய அலுவலக கட்டிட பணிகள்
- கிழக்கு மண்டல புதிய அலுவலக கட்டிட பணிகளை அமைச்சர் தொடங்கி வைத்தார்.
- ரூ.4 கோடி மதிப்பீட்டில் அலுவலகம் கட்ட மாநகராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
மதுரை
மதுரை மாநகராட்சியில் 5 மண்டலங்கள் உள்ளன இதில் 1-வது மண்டலத்தில் கிழக்கு 1 முதல் 20 வார்டுகள் உள்ளன. இந்த மண்டலத் திற்கு தனி அலுவலகம் இல்லாமல் மதுரை ஆனை யூரில் உள்ள அரசு கட்டி டத்தில் தற்காலிகமாக இயங்கி வருகிறது.
இந்த நிலையில் கிழக்கு மண்டல அலுவலகத்திற்கு புதிய கட்டிடம் கட்டுவதற்கு மதுரை சர்வேயர்காலனி ரவுண்டானா அருகே இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு ரூ.4 கோடி மதிப்பீட்டில் அலுவலகம் கட்ட மாநகராட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.
இதற்கு அரசு ஒப்புதல் கிடைத்த நிலையில் இன்று பூமிபூஜை நடந்தது. அமைச்சர் மூர்த்தி கலந்து ெகாண்டு கட்டிட பணிகளை தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் பிரவீன் குமார், எம்.எல்.ஏ.க்கள் வெங்கடேசன், பூமிநாதன், துணைமேயர் நாகராஜன், மண்டல தலைவர் வாசுகி சசிகுமார், மேற்கு ஊராட்சி ஒன்றிய தலைவர் வீரராக வன், கவுன்சிலர்கள், கார்த்திகேயன், ரோகிணி பொம்மை தேவன், தி.மு.க. இலக்கிய அணி மாவட்ட தலைவர் நேரு பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து செட்டிகுளம் ஊராட்சியில் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் கிராம சாவடி கட்டும் பணிகளையும் அமைச்சர் ெதாடங்கி வைத்தார்.