பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு:அ.தி.மு.க.வினர் கொண்டாட்டம்
- பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
- அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
மேலூர்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் தேர்தல் செல்லும் என சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியதை தொடர்ந்து அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து மேலூர் தெற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான தமிழரசன் தலைமையில் மேலூர் தெற்கு ஒன்றிய செயலாளரும், மேலூர் யூனியன் சேர்மனுமான பொன்னுச்சாமி கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக சென்று மேலூர் செக்கடி கக்கன் சிலை முன்பு பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினார்.
இதில் மேலூர் நகர்மன்ற உறுப்பினர் திவாகர் தமிழரசன், நகர் பொருளாளர் கந்தசாமி, கிடாரிப்பட்டி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், தலைமைக் கழக பேச்சாளர் மலைச்சாமி, பேரவை இணைச் செயலாளர் உதயசங்கர், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் அரிசி கண்ணன், முன்னாள் நகர செயலாளர் நாகசுப்பிரமணியன், முன்னாள் நகர் மன்ற உறுப்பினர்கள் ஷாஜஹான், காதர்மைதீன், சக்கரவர்த்தி, பாலகிருஷ்ணன், ராமலிங்கம் மற்றும் நிர்வாகிகள் சீனிவாசன், தவபாண்டி, வழக்கறிஞர்கள் பாண்டிச்செல்வம், கண்ணன், திருமேனி, அமைப்புசாரா ஓட்டுனர் அணி செயலாளர் அர்ச்சுனன், கிடாரிப்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் ராமகிருஷ்ணன், வட்ட செயலாளர்கள் பாண்டித்துரை, சரவணன், திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.