உள்ளூர் செய்திகள்

வீட்டு வரி செலுத்தியவர்களிடம் மட்டுமே மின் கட்டணம் வசூலிக்க வேண்டும்

Published On 2023-01-22 07:57 GMT   |   Update On 2023-01-22 07:57 GMT
  • வீட்டு வரி செலுத்தியவர்களிடம் மட்டுமே மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என்று திண்டியூர் ஊராட்சி தலைவர் லட்சுமி சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
  • இதன் மூலம் ஊராட்சிகளுக்கு வசூலிக்க வேண்டிய வீட்டு வரி சரியாக வசூலாகிவிடும். ஊராட்சியும் சிறப்பாக செயல்படும்.

மதுரை

மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட திண்டியூர் ஊராட்சி தலைவராக இருப்பவர் லட்சுமி சந்திரசேகர். இவர் இப்பகுதி வாழ் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வழங்கி வருவதுடன் தொலைநோக்கு சிந்தனையுடன் பல திட்டங்க ளையும் இப்பகுதிகளில் நிறைவேற்றி யுள்ளார்.

குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் திண்டியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மாணவர்கள் பயன்பெறும் வகையில் தங்களது சொந்த செல வில் ஆசிரியர்களை தேர்வு செய்து வீடுகளில் முடங்கி கிடக்கும் மாணவ- மாணவிகள் பயன்பெறும் வகையில் அவர்கள் வீடுகளுக்கே சென்று கல்வி கற்பிக்க ஏற்பாடு செய்திருந்தார்.

மேலும் மாணவ- மாணவி களுக்கு தேவையான கல்வி உபகரணங்களை வாங்கி தந்தும் ஆசிரியர்களுக்கு தங்களது சொந்த செலவில் சம்பளம் வழங்கியும் சேவை செய்திருந்தார்.

எனவே இதுபோன்று தொலைநோக்கு சிந்தனை யுடன் அர்ப்பணிப்பு உணர்வுடன் சாதனைகளை செய்து வந்த லட்சுமி சந்திரசேகர் சமீபத்தில் திண்டியூர் ஊராட்சிக்கு புதிய கட்டிடம் கட்டும் பணியினை அரசு உத்தரவு பணி செயல்படுத்தினார். அப்போது அரசு நிர்ணயித்த தொகை ரூ.20 லட்சம் போக தனது சொந்த பணம் ரூ.13 லட்சத்தை அலுவலகத்துக்கு செலவு செய்து அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டரிடம் பாராட்டை பெற்றார்.

இந்த நிலையில் சமீபத்தில் நடைபெற்ற ஊராட்சி தலைவர்கள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட ஊராட்சித் தலைவர் லட்சுமி சந்திரசேகர் ஊராட்சியில் வீட்டு வரி, தொழில்வரி, குழாய் வரி போன்ற வரிகளை வசூலிக்க பெரும் சிரமம் ஏற்படுகிறது என்றும், சில வீடுகளில் கணவன்-மனைவி இருவரும் அரசு மற்றும் தனியார் வேலை களில் உள்ளதால் வேலை நாட்களில் ஊராட்சி பணியாளர்கள் வரி வசூலிக்க முடியவில்லை என்றும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளில் வீட்டின் உரிமையாளர்கள் வரி செலுத்த நினைத்தாலும் அவர்களாலும் வரி செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது நிருபர்களிடம் கூறியதாவது:-

இது போன்று வரிப்பாக்கிகளை வசூலிக்க ஒரு அருமையான வழி உள்ளது. அரசு தற்போது வீட்டு வரியை ஆன்லைன் மூலமாக செலுத்தலாம் என்ற உத்தரவு பிறப்பித்த நிலையில் மக்கள் வீட்டு வரி, குழாய் வரி ஏன் மாநகராட்சி பகுதியில் உள்ள மக்கள் பாதாள சாக்கடை வரி மற்றும் வருமான வரி போன்றவைகளை பாக்கி வைத்துள்ளனர். ஆனால் யாரேனும் மின்சார வரியை பாக்கி வைத்திருக்கி றார்களா? என்றால் இல்லை.

எனவே மக்களுக்கு அவசியம் தேவைப்படுவதி னால் மின்சார வரியை மட்டும் சரியாக செலுத்துகிறார்கள் என்ப தால் ஆண்டுதோறும் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வீட்டு வரிகளே செலுத்திய நபர்களுக்கு தான் ஏப்ரல் மாதம் மின்சார கட்டணம் வசூலிக்க வேண்டும். அப்படி வீட்டு வரி உள்ளிட்ட பிற வரிகளை செலுத்தாத நபர்களுக்கு மின் கட்டணம் வசூலிக்க கூடாது என்ற நிலையை அரசு உருவாக்க வேண்டும்.

மின் கட்டணம் செலுத்த வில்லை என்றால் மின்சாரம் தடைபடும் என்பதால் மக்கள் வீட்டு வரி உள்ளிட்ட பல வரி களை சரியாக செலுத்தி விடுவார்கள். இதன் மூலம் ஊராட்சிகளுக்கு வசூலிக்க வேண்டிய வீட்டு வரி சரியாக வசூலாகிவிடும். ஊராட்சியும் சிறப்பாக செயல்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News