ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்-கலெக்டரிடம் மனு
- ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.
- பலமுறை இதுகுறித்து கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
மதுரை
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் இன்று குறைதீர்க்கும் முகாம் நடந்தது. பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளிக்க வந்திருந்தனர்.
மதுரை முத்துப்பட்டி பகுதியில் அதிகளவில் ஆக்கிரமிப்புகள் இருப்ப தாகவும், அவற்றை அகற்ற கோரியும் வீரமுடையான், கீழமுத்துப்பட்டி பொதுமக்கள் நலசங்கம் சார்பில் கண்ணன், கர்ணன், கணேசன் உள்ளிட்டோர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். மதுரை மாநக ராட்சி பகுதியில் இருந்து அதிகமான குப்பை லாரிகள் முத்துப்பட்டி வழியாக செல்கிறது. பலமுறை இதுகுறித்து கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
எனவே கலெக்டர் இந்த கோரிக்கையை ஏற்று ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.
இதேபோல் பெருங்குடி பகுதியில் தங்களுக்கு சொந்தமான இடத்தை தனிநபர் ஆக்கிரமித்து விட்டதாகவும், அந்த இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனு கொடுத்தனர்.
முதியோர், விதவை உதவித்தொகை என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திரளானோர் மனு கொடுத்தனர். வழக்கமாக காலை 10 மணி அளவில் கலெக்டர் உள்ளிட்ட அனைத்து துறை அதிகாரிகளும் வருகை தந்து பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு தீர்வு அளிப்பார்கள்.
இன்று காலை 11 மணி வரையும் கலெக்டர் உள்ளிட்ட முக்கிய அதிகாரி கள் வராததால் பொது மக்கள் மனு கொடுப்பதற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.