உள்ளூர் செய்திகள்

கலெக்டர் அலுவலகத்தில் நடந்த சார்பதிவாளர்கள் பணி ஆய்வு கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி, கலெக்டர் சங்கீதா கலந்து கொண்டனர்.

உரிய முத்திரை தீர்வை-கட்டணத்துடன் பத்திரம் பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும்

Published On 2023-09-30 09:27 GMT   |   Update On 2023-09-30 09:27 GMT
  • உரிய முத்திரை தீர்வை-கட்டணத்துடன் பத்திரம் பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும்.
  • பொதுமக்கள் அனைத்து கட்டணங்களையும் ஆன்லைன் மூலமாகவே செலுத்தலாம்.

மதுரை

மதுரை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மதுரை மாவட்ட சார்பதி வாளர்கள் ஆய்வு கூட்டம் நடந்தது. அமைச்சர் மூர்த்தி தலைமை தாங்கினார். கலெக்டர் சங்கீதா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி பேசியதாவது:-

மதுரை வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட மதுரை வடக்கு, மதுரை தெற்கு என இரு பதிவு மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் 26 சார் பதிவாளர் அலுவலகங்கள் செயல்படு கின்றன. நடப்பு 2023-24 நிதி ஆண்டில் மதுரை வடக்கு பதிவு மாவட்டத்திற்கு ரூ.478 கோடி, தெற்கு மாவட்டத்திற்கு ரூ.57 ஆயிரத்து 125 கோடி வருவாய் இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

இதில் இந்த மாதம் வரை மதுரை வடக்கு மாவட்டத்தில் ரூ.139.29 கோடியும், தெற்கு மாவட்டத்தில் ரூ.14 ஆயரத்து 159 கோடியும் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது. அலு வலர்கள் தங்களது இலக்கை பூர்த்தி செய்யும் வகையில் பணியாற்ற வேண்டும்.

மேலும் தமிழ்நாட்டில் சார்பதிவாளர் அலுவல கங்கள் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுள்ளன. பொதுமக்கள் அனைத்து கட்டணங்களையும் ஆன்லைன் மூலமாகவே செலுத்தலாம்.

சார் பதிவாளர்கள் அரசு நிர்ணயித்துள்ள வழிகாட்டி மதிப்பு அடிப்படையில் பதிவு தாரர்கள் சொத்து மதிப்பினை பதிவு ஆவணங்களில் தவறாமல் தெரிவித்து அதற்குரிய முத்திரை தீர்வை மற்றும் பதிவு கட்டணத்தை செலுத்தி ஆவணங்களை பதிவு செய்வதை உறுதி செய்ய வேண்டும். இதில் அரசு வழிகாட்டு நெறி முறைகளை பின்பற்றாமல் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் சார்பதி வாளர்கள் மீது பாரபட்சம் இன்றி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் பதிவுத்துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், துணை பதிவுத்துறை தலைவர் ரவீந்திரநாத் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News