சமத்துவ மக்கள் கட்சி தீர்மான விளக்க பொதுக்கூட்டம்
- சமத்துவ மக்கள் கட்சி தீர்மான விளக்க பொதுக்கூட்டம் நாளை நடக்கிறது.
- கட்சியின் நிறுவன தலைவர் சரத்குமார் தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார்.
மதுரை
சமத்துவ மக்கள் கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர்கள் புறா மோகன் (மத்தி), பாலமேடு கார்த்திக் (வடக்கு) ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் 7-வது பொதுக்குழு கூட்டத்தில் தீர்மான விளக்க பொதுக்கூட்டம் மதுரையில் நாளை (28-ந்தேதி) மாலை 5 மணிக்கு பழங்காநத்தம் ரவுண்டானா அருகில் நடைபெறுகிறது.
கூட்டத்திற்கு கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் சுந்தர் விளக்க வுரையாற்றுகிறார். மாநில துணை பொதுச் செயலாளர் ஈஸ்வரன் வரவேற்று பேசுகிறார். மாநில வர்த்தக அணி துணை செயலாளர் கதிரேசன், மாவட்ட செயலாளர்கள் பஞ்சு, சிவாஜி பூமிநாதன் ஆகியோர் தலைமை மற்றும் முன்னிலை வகிக்கிறார்கள். சமத்துவ மக்கள் கட்சியின் நிறுவன தலைவர் சரத் குமார் தலைமை தாங்கி சிறப்புரையாற்றுகிறார்.
முதன்மை துணை பொதுச்செயலாளர் கணேசன், கொள்கை பரப்பு செயலாளர் விவேகானந்தன் உள்பட நிர்வாகிகள் விளக்கவுரையாற்றுகின்றனர். முடிவில் மாநில வழக்கறிஞர் அணி துணை செயலாளர் ரவி நன்றி கூறுகிறார்.
மதுரையில் நடைபெற உள்ள சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்கூட்டத் தில் கலந்து கொள்ள வருகை தரும் நிறுவ னத்தலைவர் சரத்குமாருக்கு கட்சி சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. மேலும் பொதுக் கூட்டத்திற்கு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து கார், வேன் மூலம் திரளான தொண்டர்கள் வருகை தர உள்ளனர்.
இதையொட்டி கூட்ட ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டு வருகின்றன. எனவே சமத்துவ மக்கள் கட்சியின் பொதுக்கூட்டத் திற்கு தலைமைக்கழக நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.