உள்ளூர் செய்திகள்

கல்-மண் குவாரி அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு

Published On 2022-07-12 08:44 GMT   |   Update On 2022-07-12 08:44 GMT
  • கல்-மண் குவாரி அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
  • குவாரிகளால் ஏற்படும் தூசி காரணமாக விவசாய பணிகள் பாதிக்கப்படும்.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கள்ளிக்குடியை அடுத்துள்ள தூம்பக்குளம் பகுதியில் புதிதாக கல்-மண் குவாரி அமைக்க அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளது. கல்குவாரி அமைய உள்ள இடத்தை சுற்றிழும் 400 ஏக்கருக்கு மேல் விவசாய நிலங்கள் உள்ளன. மேலும் அருகில் உள்ள முனியாண்டிபுரம் கிராமத்தில் 30-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். தூம்பக்குளத்தில் செயல்படும் அரசு உயர்நிலைப்பள்ளியில் 200-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பகுதியில் கல்-மண் குவாரி அமைத்தால் பொதுமக்கள் கடும் அவதி அடைவார்கள். வெடி வைத்து கற்களை உடைக்கும்போது அங்கு வசிக்கும் விவசாய குடும்பங்களுக்கும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கும் பாதிப்பு ஏற்படும். குவாரிகளால் ஏற்படும் தூசி காரணமாக விவசாய பணிகள் பாதிக்கப்படும். எனவே இப்பகுதியில் குவாரிகள் அமைக்க கூடாது என பாசன விவசாய சங்கத்தினர் மற்றும் கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

Tags:    

Similar News