உள்ளூர் செய்திகள்

தென் மாவட்டங்களுக்கு பண்டிகை சீசன் சிறப்பு ெரயில்கள்

Published On 2023-04-01 08:10 GMT   |   Update On 2023-04-01 08:10 GMT
  • தென் மாவட்டங்களுக்கு பண்டிகை சீசன் சிறப்பு ெரயில்கள் விடப்படுகிறது.
  • தகவலை மதுரை கோட்ட ெரயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

மதுரை

தமிழகத்தில் மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, தமிழ் புத்தாண்டு, பங்குனி உத்திரம் ஆகிய பண்டிகை கள் வருகின்றன. எனவே கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயில்களை இயக்குவது என்று தென்னக ெரயில்வே முடிவு செய்து உள்ளது.

அதன்படி தாம்பரம்- நெல்லை இடையே இரு மார்க்கங்களிலும் சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயில்கள் இயக்கப்படுகின்றன. 4-ந் தேதி தாம்பரத்தில் இருந்து இரவு 10.30 மணிக்கு எக்ஸ்பிரஸ் ெரயில் புறப்படு கிறது. அது மதுரைக்கு அதிகாலை 5.35 மணிக்கு வந்து சேரும். மதுரை யில் இருந்து புறப்படும் ெரயில் காலை 9 மணிக்கு நெல்லை செல்லும். மறு மார்க்கத்தில் 5-ந் தேதி நெல்லையில் இருந்து மாலை 5.35 மணிக்கு புறப்படும் ெரயில் அடுத்த நாள் அதிகாலை 4.10 மணிக்கு தாம்பரம் செல்லும். இது மதுரைக்கு இரவு 8.35 மணிக்கு வரும்.

தாம்பரம்-நாகர்கோவில் இடையே சிறப்பு எக்ஸ்பிரஸ் ெரயில்கள் இயக்கப்படு கின்றன. இது 6-ந் தேதி மாலை 4.45 மணிக்கு தாம்ப ரத்தில் இருந்து புறப்படும். மதுரைக்கு நள்ளிரவு 11.45 மணிக்கு வரும்.

அதன் பிறகு நாகர்கோவி லுக்கு அடுத்த நாள் அதி காலை 3.35 மணிக்கு செல்லும். மறு மார்க்கத்தில் 7-ந் தேதி நாகர்கோவிலில் இருந்து காலை 11.55 மணிக்கு புறப்படும் ெரயில், எழும்பூருக்கு நள்ளிரவு 11.55 மணிக்கு செல்லும். இந்த ெரயில் மதுரைக்கு இரவு 8.55 மணிக்கு வரும்.

12-ந் தேதி நாகர்கோவி லில் இருந்து மாலை 4.30 மணிக்கு புறப்படும் ெரயில், தாம்ப ரத்துக்கு அடுத்த நாள் காலை 4.10 மணிக்கு செல்லும். 13-ம் தேதி தாம்பரத்தில் இருந்து மாலை 4.45 மணிக்கு புறப்படும் ெரயில் அடுத்த நாள் காலை 4.15 மணிக்கு நாகர்கோவில் செல்லும் .

மேற்கண்ட தகவலை மதுரை கோட்ட ெரயில்வே அலுவலகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News