இலவச ஜூட் பேக், லேப்டாப், பேக் தயாரிக்கும் பயிற்சி தொடக்க விழா
- இலவச ஜூட் பேக், லேப்டாப், பேக் தயாரிக்கும் பயிற்சி தொடக்க விழா நடந்தது.
- விழாவிற்கான ஏற்பாடுகளை பயிற்சியாளர் மகேஸ்வரி செய்திருந்தார்.
மதுரை
இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனமான அசஞ்ஜர் நிறுவனம் மற்றும் பெட்கிராட் தொழிற்பயிற்சி பள்ளி இணைந்து மதுரை அவனி யாபுரத்தில் இலவச ஜூட் பேக் தயாரிக்கும் பயிற்சி தொடக்க விழா பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்பு ராமன் தலைமையில் நடை பெற்றது.
கே.வி.ஐ.சி மண்டல இயக்குனர் அசோகன் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். அவர் பேசுகையில், சுய தொழில் தொடங்குபவர்கள் மத்திய அரசின் 35 சதவீதம் மானிய தொகையை கடனாக பெறலாம் என்றார். இதில் பங்கேற்ற மாவட்ட தொழில் மைய உதவி பொது மேலாளர் ஜெயா பேசுகை யில், தமிழக அரசு மானி யத்துடன் புதிதாக தொழில் தொடங்கு பவர்கள் இந்த நல்ல வாய்ப்பை பயன் படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
இ.டி.ஐ.ஐ. முதுநிலை திட்ட அலுவலர் கவிதா பலராமன் பேசுகையில், பயிற்சிக்கு பின் தொழில் முனைவோராக மாறுவதற்கு எல்லா உதவிகளையும் வழி முறைகளும் செய்து தரப் படும் என கூறினார். சவுத் இந்தியன் வங்கி அலுவலர் மீனாட்சி சுந்தரி வங்கி வழிமுறைகள், கடன் பெற்று முன்னேறும் திட்டங்கள் குறித்து பேசினார்.
இந்நிகழ்ச்சியில் பெட் கிராட் பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்று பேசினார். பொருளாளர் கிருஷ்ணவேணி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் முடிவில் துணைத்தலைவர் மார்ட்டின் லூதர் கிங் நன்றி கூறினார். விழாவிற்கான ஏற்பாடு களை பயிற்சியாளர் மகேஸ்வரி செய்திருந்தார்.