உள்ளூர் செய்திகள்

மதுரை மாவட்ட தொழில் மைய உதவி பொது மேலாளர் ஜெயா குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தபோது எடுத்த படம். அருகில் பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராமன் உள்ளார்.

மதுரை பெட்கிராட் சார்பில் 17 வகையான பேக் தயாரிக்க இலவச பயிற்சி

Published On 2023-09-27 09:10 GMT   |   Update On 2023-09-27 09:10 GMT
  • மதுரை பெட்கிராட் சார்பில் 17 வகையான பேக் தயாரிக்க இலவச பயிற்சி வழங்கப்பட்டது.
  • அதற்கான வழிமுறைகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக எளிமையாக்கப்பட்டுள்ளது.

மதுரை

இந்திய தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் அசஞ்ஜர் நிறுவ னம், மதுரை பெட்கிராட் இணைந்து ஜூட் பேக், லேப்டாப் பேக், லஞ்ச் பேக், ஸ்கூல் பேக், வாட்டர்கேன் பேக், ஷாப்பிங் பேக் போன்ற 17 வகையான பேக் தயாரிக்கும் இலவச பயிற்சியை பெட்கிராட் நிர்வாக இயக்குனர் சுப்புராமன் தலைமையில் நடைபெற்றது.

பொதுச்செயலாளர் அங்குசாமி வரவேற்று பேசினார். பொருளாளர் கிருஷ்ணவேணி, துணைத் தலைவர் மார்ட்டின் லூதர் கிங் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை மாவட்ட தொழில் மைய உதவி பொது மேலாளர் ஜெயா குத்துவிளக்கேற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசுகையில், சுயதொழில் தொடங்கு வதற்கு மானியத்துடன் வங்கி கடன் வழங்குவதற்கு மத்திய, மாநில அரசுகள் பல ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்துள்ளது.மேலும் அதற்கான வழிமுறைகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக எளிமையாக்கப்பட்டுள்ளது என்றார்.

இ.டி.ஐ.ஐ. முதுநிலை திட்ட அலுவலர் கவிதா பலராமன் பேசுகையில், பயிற்சியின்போது தொழில் முனைவோராக மாறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. அதற்கு தன்னம்பிக்கையும் ஆர்வமும் உள்ளவர்கள் தான் தொடர்ந்து ஒரு தொழிலை செய்து முன்னேற முடியும் என பேசினார்.

பஞ்சாப் நேஷனல் வங்கி மேலாளர் தங்கமலர் பேசுகையில், மானியத்துடன் கடன் வழங்க வங்கி நிர்வாகம் தயாராக உள்ளது. உரிய ஆவணங்களுடன் வந்து கடன் பெற்று சுயதொழில் துவங்க நீங்கள் முன்வர வேண்டும் என பேசினார்.

மதுரை மாநகராட்சி நகரமைப்பு குழு உறுப்பினரும், 61வது வார்டு கவுன்சிலருமான செல்வி செந்தில் பேசுகையில், 30 ஆண்டுகளாக இலவச தொழில் பயிற்சி நிறுவனமான பெட்கிராட் மூலமாக எங்களது பகுதியில் பல்வேறு தையல் தொழில் செய்யும் பெண்கள் முன்னேற்ற பாதையை நோக்கி சென்றுள்ளனர்.

எனவே நீங்கள் அனைவரும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி முன்னேற வேண்டும் என கூறினார். நிகழ்ச்சியின் முடிவில் பயிற்சியாளர் விஜயவள்ளி நன்றி கூறினார்.

Tags:    

Similar News