உள்ளூர் செய்திகள்

ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக ரூ. 10 லட்சம் மோசடி

Published On 2023-03-21 08:33 GMT   |   Update On 2023-03-21 08:33 GMT
  • ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாக வாலிபர் ஒருவர் ரூ. 10 லட்சம் மோசடி செய்தார்.
  • இந்த புகாரின் அடிப்படையில் திருமங்கலம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

திருமங்கலம்

மதுரை மாவட்டம் திருமங்கலம் முகமதுஷா புரத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி(வயது55). இவர் திருமங்கலம் நகர் போலீசில் புகார் மனு கொடுத்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது:-

கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு எனது மகன் பிரகாஷ் வேலை தேடிக்கொண்டி ருந்தார். அப்போது நண்பர் மூலம் தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கருத்தபட்டியை சேர்ந்த தங்கமாயன்(35) என்பவர் அறிமுகமானார். அவர் உங்களது மகனுக்கு ரெயில்வேயில் வேலை வாங்கித்தருவதாகவும், அதற்கு பணம் தேவைப்படு வதாகவும் கூறினார்.

இதை நம்பி தங்கமாயனிடம் பல்வேறு தவணைகளில் ரூ.10 லட்சம் வரை கொடுத்தேன். அதனை பெற்றுக்கொண்ட அவர் ஹவுரா ரெயில் நிலையத்தில் வேலைக்கு சேர்வதற்கான ஆணையை வழங்கினார்.

அதனை எனது மகன் கொண்டு சென்று விசாரித்த போது போலியானது என தெரியவந்தது.

இதனால் அதிர்ச்சியடைந்த நான் பணத்தை திருப்பித்தருமாறு கேட்கேன். ஆனால் அவர் பணத்தை தராமல் கடந்த ஒரு வருடமாக பல்வேறு காரணங்களை கூறி வருகிறார். எனவே தங்கமாயனிடம் இருந்து ரூ.10 லட்சத்தை மீட்டுத்தர வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த புகாரின் அடிப்படையில் திருமங்கலம்நகர் போலீசார் தங்கமாயன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். 

Tags:    

Similar News