உள்ளூர் செய்திகள்

கோபுரங்கள்-ஆயிரங்கால் மண்டபம் கணினி வரைபடமாக ஆவணப்படுத்தும் திட்டம்

Published On 2023-03-24 08:42 GMT   |   Update On 2023-03-24 08:42 GMT
  • கோபுரங்கள்-ஆயிரங்கால் மண்டபம் கணினி வரைபடமாக ஆவணப்படுத்தும் அறிவிக்கை வெளியிடப்பட்டு உள்ளது.
  • மீனாட்சி அம்மன் கோவிலை வரைபடம் வாயிலாக கண்டு களிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரை

உலகப்புகழ் வாய்ந்த மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். இங்குள்ள கோபுரம் மற்றும் சிற்பங்கள் ஆகியவை பல நூறாண்டுகள் பழமையும், சிறப்பும் வாய்ந்தவை.

மதுரை மாநகரின் மையத்தில் 15 ஏக்கர் பரப்ப ளவில் மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ளது. இங்குள்ள சிறப்பு அம்சங்களை விளக்கும் வகையில், வரைபடம் வெளியிட வேண்டும் என்று பொதுமக்கள் தரப்பில் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்தநிலையில் மதுரை மீனாட்சி அம்மன் கோவி லின் கோபுரங்கள் மற்றும் கோவில் வளாகம் முழுவதையும் நவீன கணினி வரைபடம் மூலம் ஆவணப் படுத்துவது என்று கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக கோவில் வளாகத்தில் உள்ள கோபுரங்கள், நுழைவு வாயில்கள், கோவில் விமா னங்கள், பொற்றாமரை குளம், ஆயிரங்கால் மண்டபம் உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த பகுதிகளை கணினி வரைபடமாக உருவாக்கு வதற்காக ரூ.4.5 லட்சம் மதிப்பில் ஒப்பந்தப்புள்ளி கோரி அறிவிக்கை வெளி யிடப்பட்டு உள்ளது.

இதன் அடிப்படையில் தகுதியான நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு, விரை வில் ஒப்பந்தம் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் வரலாற்று பெருமை, ஆன்மீக சிறப்பு வாய்ந்த மீனாட்சி அம்மன் கோவிலை வரைபடம் வாயிலாக கண்டு களிக்கும் வாய்ப்பு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News