தி.மு.க. ஆட்சியில் போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன-அண்ணாமலை குற்றச்சாட்டு
- தி.மு.க. ஆட்சியில் போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன என பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டியுள்ளார்.
- தேர்தல் அறிக்கையில் கொடுத்த எதையுமே நிறைவேற்றவில்லை.
மதுரை
மத்திய பாரதிய ஜனதா அரசின் 8 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் மதுரை பழங்காநத்தம் சந்திப்பில் நடந்தது. மாநகர் மாவட்ட தலைவர் டாக்டர் சரவணன் தலைமை தாங்கினார். இதில் பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசியதாவது:-
தமிழக மக்களை தி.மு.க. அரசு தொடர்ந்து ஏமாற்று வதற்கு முயற்சி செய்து கொண்டே வருகிறது. அவர்கள் தேர்தல் அறிக்கை யில் கொடுத்த எதையுமே நிறைவேற்றவில்லை. குறிப்பாக குடும்பத் தலைவி களுக்கு மாதந்தோறும் ரூ. 1000 ஊக்கத்தொகை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. கடந்த 6 மாதங்களாக நிதியமைச்சர் விரைவில் இத்திட்டம் தொடங்கப்படும் என தெரிவித்து வருகிறார். ஆனால் தற்போது வரை நிறைவேற்றப்படவில்லை.
தி.மு.க. ஆட்சியில் போலீசாரின் கைகள் கட்டப்பட்டுள்ளன. இதன் காரணமாக கொலை, கொள்ளை, வழிப்பறி, கூட்டு பலாத்காரம் அதிகம் நடந்து வருகிறது.
என் மீது இதுவரை தி.மு.க. அரசும், அமைச்சர்களும் ரூ. 620 கோடிக்கு மானநஷ்டஈடு வழக்கு போட்டு உள்ளனர். எந்த மிரட்டலுக்கும் பா.ஜ.க. பயப்படாது.தி.மு.க.வின் ஊழலை தொடர்ந்து தட்டிக் கேட்போம். ஊழலுக்கு எதிராக பா.ஜ.க. குரல் கொடுக்கும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மத்தியில் மீண்டும் பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி அமைக்கும்.
தமிழகத்தில் திராவிட மாடல் என்ற பெயரில் சினிமா மாடல் ஆட்சிதான் நடக்கிறது. தி.மு.க. ஆட்சி தொடர்பாக மதுரை ஆதீனம் கூறிய கருத்தில் எந்த தவறுமில்லை. ஆதீனத்தை மிரட்டி அடிபணிய வைத்து விடலாம் என தி.மு.க. அரசு நினைக்கிறது. அவரை தொட்டால் பா.ஜ.க. தட்டிக்கேட்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில் பங்கேற்ற வெளியுறவுத்துறை மத்திய இணை மந்திரி முரளிதரன் பேசுகையில், தமிழக மக்கள் பிரதமர் மோடியின் இதயத்தில் இடம் பிடித்துள்ளனர். அதனால் அவர் தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கு முக்கியத்து வம் கொடுத்து வருகிறார். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் உலகிற்கு முன்மாதிரியாக மோடி அரசு திகழ்ந்தது என்றார்.
இக்கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர் சீனிவாசன், அன்னை பாத்திமா கல்வி நிறுவன ங்களின் குழுமத் தலைவர் எம்.எஸ். ஷா, கோட்ட பொறுப்பாளர் கதலி நரசிங்கப் பெருமாள், மதுரை மாநகர் மாவட்ட துணைத்தலைவர் கே. ஜெய வேல், மாநில கூட்டுறவு பிரிவு தலை வரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பின ருமான மாணிக்கம், மாநில கூட்டுறவு பிரிவு செயலாளர் பாஸ்கரன், நிர்வாகிகள் வினோத்குமார், இளங்கோ மணி, கோகுல் அஜித், மனோகரன், பழனிவேல், வடமலையான், மதுரை புறநகர் கூட்டுறவு பிரிவு தலைவர் உங்குசாமி, மதுரை நகர் கூட்டுறவு பிரிவு தலைவர் ஆர்.வாசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.