தன்னம்பிக்கை இருந்தால் உலகில் எதையும் சாதிக்கலாம்-எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேச்சு
- தன்னம்பிக்கை இருந்தால் உலகில் எதையும் சாதிக்கலாம் என்று எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேசினார்.
- ஏற்பாட்டை மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.
மதுரை
மதுரையின் அட்சய பாத்திரம் அமைப்பு மூலம் ரோட்டோரத்தில் உள்ள வறியவர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட வர்களுக்கு தினமும் மதிய உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு 710 நாளை எட்டியது.
இதையொட்டி மதுரை சொக்கிகுளம் ஜே.சி அரங்கில் கொடை யாளர்களுக்கு அட்சய சேவா ரத்னா விருது வழங்கும் விழா நடந்தது. டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு வரவேற்றார். ரோட்டரி முன்னாள் ஆளுநர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார். ஆடிட்டர் சேது மாதவா முன்னிலை வகித்தார்.
எஸ்.வி.எஸ். கடலை மாவு நிறுவன நிர்வாக பங்குதாரர் சூரஜ் சுந்தர சங்கர் வாழ்த்துரை வழங்கினார். எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 18 பேருக்கு அட்சய சேவா ரத்னா விருதை வழங்கினார்.
டாக்டர் உஷா கிம், மின்வாரிய முன்னாள் கூடுதல் தலைமை பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, பி.எஸ்.என்.எல். முன்னாள் உதவி பொது மேலாளர் கிருஷ்ண மூர்த்தி, காந்தி பொட்டல் சிலை பராமரிப்பு கமிட்டி தலைவர் சாமிக் காளை, நானோ சொல்யூ ஷன்ஸ் நிர்வாக இயக்குநர் முகமது உமர், தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்க துணைத் தலைவர் இளங்கோவன், அமுதா அக்சயா டிரஸ்ட் நிர்வாகி அமுத லட்சுமி, ஆச்சார்யா எஜுகேஷன் நிர்வாக இயக்குனர் கண்ணன், எஸ்.எஸ். காலனி செல்வி கிளினிக் நிர்வாக இயக்குநர் டாக்டர் சுவாமிநாதன். சோழவந்தான் முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பையா, ஆன்மா சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகி ரத்தினவேல்சுவாமி, எஸ்.வி.எஸ். கடலை மாவு நிர்வாக பங்குதாரர் சூரஜ் சுந்தர சங்கர், உசிலம்பட்டி தமிழ் ஒளி தொலைக்காட்சி நிறுவனர் தமிழரசன், மதுரை கிழக்கு ரோட்டரி சங்க தலைவர் நாகரத்தினம், மதுரை பாண்டியன் ரோட்டரி சங்க செயலாளர் சலீம் உள்பட 15 பேர் அட்சய சேவா ரத்னா விருதை பெற்றனர்.
விழாவில் எழுத்தாளர் லேனா தமிழ்வாணன் பேசியதாவது:-
உங்களைச் சுற்றி உங்களை தாழ்வாக கருது பவர்களை விட உங்களை ஊக்கப்படுத்தும் நல்லவர்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். மனிதனுக்கு இரு சந்தர்ப் பங்களில் வேகம் வர வேண்டும். ஒன்று உங்களை குட்டுகிற போது மற்றொன்று தட்டிக் கொடுக்கும் போது. இந்த இரு சந்தர்ப்பங்களிலும் வேகம் வராவிட்டால் மனிதன் சாதிப்பது கடினம்.
தன்னம்பிக்கை ஒவ்வொரு மனிதனுக்கும் மூச்சுக்காற்று. தன்னம்பிக்கையோடு செயல்பட்டால் உலகில் எதையும் சாதிக்கலாம். பிறருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணம் ஒவ்வொரு மனிதனுக்கும் இயல்பிலேயே வரவேண்டும். குழந்தைகளுக்கு பிறருக்கு உதவ வேண்டும் என்கிற எண்ணத்தை இளமையிலேயே கற்றுக் கொடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மதுரையின் அட்சய பாத்திரம் டிரஸ்ட் நிறுவனர் நெல்லை பாலு செய்திருந்தார்.