- சுதந்திர தின விழா கொண்டாட்டப்பட்டது.
- அனைவருக்கும் இனிப்பு வழங்கபட்டது.
மதுரை
மதுரையில் பல்வேறு இடங்களில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடந்த சுதந்திர தின விழாவில் கல்லூரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் தேசியக் கொடி ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். விழாவில் சுதந்திர போராட்ட தியாகிகள் சுந்தரமகாலிங்கம், பாக்கியம் செல்லதுரை, ஜோதி, ராஜலெட்சுமி, நச்சம்மாள் ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் என திரளானோர் கலந்து கொண்டனர். சத்திரப்பட்டியில் உள்ள கல்லூரியில் கூடுதல் வளாகத்திலும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
மனோகரா நடுநிலைப்பள்ளி
மதுரை மனோகரா நடுநிலைப்பள்ளியில் குறிஞ்சி மலர் அரிமா சங்கம், மதுரை அறம் அரிமா சங்கம் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. பள்ளி செயலர் பால் ஜெயக்குமார் வரவேற்றார். அறம் அரிமா சங்க தலைவர் ஜேசுராஜா தலைமை தாங்கினார். செல்வம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசியக் கொடியை ஏற்றினார். கவுன்சிலர் குமரவேல், முன்னாள் கவுன்சிலர் திலகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் தனபால் நன்றி கூறினார். இதில் தலைவர் காளிதாஸ், செயலர் செந்தில்குமார், பொருளாளர் மகேந்திரன் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
முத்தமிழ் மன்றம்
மதுரை ஹார்விபட்டி முத்தமிழ் மன்றத்தின் சார்பில் சுதந்திர தின விழா கொண்டாடபட்டது. தேசிய கொடியை மன்றத்தின் நிறுவன தலைவர் முன்னாள் அறங்காவலர் மகா.கணேசன் ஏற்றி வைத்தார். மன்ற நிர்வாகிகள் மாரியப்பன், நாகேந்திரன், கணபதி, மோகன், சங்கர், ஸ்டெல்லா, சுடலை முத்து, குமார், செல்வராஜ், ராஜேஷ், ஹரிகிருஷ்ணன், நாகராஜ், அஞ்சு, நாகராஜ், பாண்டியராஜன், மணிகண்டன், குணசேகரன், தங்கவேலு, சுந்தர்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். அனை வருக்கும் இனிப்பு வழங்கபட்டது.