உள்ளூர் செய்திகள்

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின விழா

Published On 2023-08-18 08:18 GMT   |   Update On 2023-08-18 08:18 GMT
  • அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.
  • பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை வளாக இயக்குநர் புஷ்பராணி நட்டு வைத்தார்.

மதுரை

அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் விரிவாக்க மையத்தின் மதுரை கீழக்குயில்குடி மையத்தில், 77-வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது.

"தேச விழா முதன்மை விழா" என்ற கருப்பொருளில், "ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்" -ன் ஒருங்கிணைந்த பகுதியாக விழா கொண்டாடப்பட்டது. மதுரை வளாக இயக்குநர் பேராசிரியர் புஷ்பராணி தேசியக் கொடியை ஏற்றி வைத்து தேசிய மாணவர் வளர்ச்சியும், கடமையும் என்ற தலைப்பில் பேசினார். விழாவில் மாணவிகள் பேச்சு, பாட்டு, கட்டுரை மற்றும் குழுப் பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் தேசப்பற்றையும் அனைவரையும் அதில் தமக்குள்ள ஈடுபாட்டையும் வெளிப்படுத்தி உற்சாகப்படுத்தினர்.

மாணவிகளுக்கு பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் மற்றும் புத்தகங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. கணினியியல் துறை மாணவி நிலாபாரதி நன்றி கூறினார். அதனைத் தொடர்ந்து பல்கலைக்கழக வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் பணியை வளாக இயக்குநர் புஷ்பராணி நட்டு வைத்தார்.

Tags:    

Similar News