பிறந்து 47 நாளில் உயிரிழந்த பச்சிளம் பெண் குழந்தை
- மதுரை அருகே பிறந்து 47 நாளில் பச்சிளம் பெண் குழந்தை உயிரிழந்தது.
- அந்த குழந்தைக்கு திடீரென சளி, காய்ச்சலால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
மதுரை
மதுரை பழங்காநத்தம் பசும்பொன் நகர் வ.உ.சி. தெருவை சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மனைவி முத்துலட்சுமி. இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். இந்த நிலையில் கர்ப்பிரியாக இருந்த முத்துலட்சுமிக்கு கடந்த 47 நாட்களுக்கு முன்பு 2-வதாக பெண் குழந்தை பிறந்தது.
இந்த நிலையில் அந்த குழந்தைக்கு திடீரென சளி, காய்ச்சலால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது. உடனே தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப் பட்டு குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் காய்ச்சல் குறையவில்லை.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக குழந்தையை மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பச்சிளம் பெண் குழந்தை பரிதாபமாக இறந்தது. இதுகுறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
மதுரை நகரில் டெங்கு காய்ச்சல் பரவி வரும் நிலையில் பிறந்த பச்சிளம் குழந்தை காய்ச்சலுக்கு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. மழை காலத்தில் வேகமாக பரவும் டெங்கு, சிக்குன்குனியா, மலேரியா போன்றவற்றை தடுக்க மாவட்ட சுகாதாரத்துறை போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.