கருணாநிதி பிறந்தநாளை 100 நாட்கள் கொண்டாட முடிவு
- தி.மு.க. சார்பில் கருணாநிதி பிறந்தநாளை 100 நாட்கள் கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது.
- இந்த தகவலை தெற்கு மாவட்ட செயலாளர் மணிமாறன் தெரிவித்துள்ளார்.
திருமங்கலம்
மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருமங்கலத்தில் நடந்தது. தெற்கு மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தெற்கு மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை மதுரை தெற்கு மாவட்டத்தில் 100 நாள்கள் தொடர்ந்து கொண்டாட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி பல்வேறு நலத்திட்டங்களை வழங்க உள்ளோம். ஜல்லிக்கட்டு போராட்டத்தில் தொடர்ந்து சட்ட போராட்டம் நடத்திய முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் மற்றும் தேனி தொகுதிகளில் தி.மு.க. வேட்பாளர் அல்லது கூட்டணி வேட்பா ளர்களின் வெற்றிக்கு அனைவரும் பாடுபட்டு அதிகளவு வாக்கு வித்தியாசத்தில் அவர்களை வெற்றி பெற செய்யவேண்டும். உறுப்பி னர் சேர்க்கையில் திருமங்க லம் தொகுதி தலைமை அறிவித்த இலக்கை தாண்டி சாதனை படைத்து உள்ளது. திருப்பரங்குன்றம் மற்றும் உசிலம்பட்டி தொகுதிகளை சேர்ந்தவர் களும் இலக்கை தாண்டி புதிய உறுப்பி னர்களை சேர்க்கவேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஏர்போர்ட்பாண்டி, துணை செயலாளர் லதாஅதியமான், திருமங்க லம் நகர செயலாளர் ஸ்ரீதர், ஒன்றிய செயலாளர்கள் தனபாண்டி, மதன்குமார் பொதுக்குழு உறுப்பினர் சிவமுருகன், தகவல் தொழில்நுட்ப அணி மண்டல பொருப்பாளர் பாசபிரபு, திருமங்கலம் நகராட்சி தலைவர் ரம்யா முத்துக்குமார், துணைத் தலைவர் ஆதவன் அதிய மான், நகர துணை செயலாளர் செல்வம், இளைஞரணி கௌதம், ஹரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.